திங்கள், 12 மார்ச், 2018

BBC :நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் உயிரழப்பு

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். படத்தின் காப்புரிமை Twitter/@Bishnusapkota அதேபோல் இந்த விமானத்தில் இருந்த குறைந்தது 22 பேர் உயிர்பிழைத்துள்ளனர். திங்கள்கிழமை பகலில் தரையிறங்கும் போது வங்கதேச விமான சேவை விமானம் ஒன்று விமான ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிழம்பு உண்டானது. மீட்பு படையினர் சிதைந்த விமானத்தில் இருந்து உடல்களை மீட்டனர்.
திரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன  விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புகை எழும்புவதை காண்பிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் ஊடகங்களில் S2-AGU என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இதனை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் உறுதி செய்யவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக