ஞாயிறு, 11 மார்ச், 2018

பாஜகவின் ரவுடி பெண்ணுக்கு அய்யாக்கண்ணு அடித்து விட்டாராம் .. வழக்கு பாய்ந்தது


  கடந்த 8 ம் தேதி திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட 4 பேர் மீது காவல்நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு tamilhtehindu :சங்கத் தலைவர் அய்யாகண்ணு மீது திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதையேற்று அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோயிலுக்குள் அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை வினியோகித்தற்காக, கோயில் நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.
இந்த நிலையில், நிர்வாகம் சார்பில் இன்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அய்யாகண்ணு துண்டு பிரசுரம் வினியோகித்தபோது அதை பாஜக பெண் நிர்வாகி நெல்லையம்மாள் தடுத்தார்.
அப்போது, இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அய்யாகண்ணு, நெல்லையம்மாளை தகாத வார்த்தையால் திட்ட, பதிலுக்கு நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக