ஞாயிறு, 11 மார்ச், 2018

ஜெயலலிதா ரஜினிக்கு : நீ போயஸ் தெருவுக்குள் காரில் வரக்கூடாது, நடந்துதான் வரவேண்டும் .. Flash Back

Ravi Raj : "நானா பதவிக்கு ஆசைப் படுபவன்? 1996 லேயே, எனது 45 வயதிலேயே முதலமைச்சர் நாற்காலி என்னைத் தேடி வந்தது! ஆனால், வேண்டாம் என்று தள்ளி விட்டவன் நான்! இப்போது 68 வயதிலா நான் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவேன்?" - யோக்கிய சிகாமணி, போலி ஆன்மீகவாதி சொரிகாலன்!
அது சரி? 1996 ல் எவன் உன்னிடம் முதலமைச்சர் நாற்காலியை தூக்கிக்கொண்டு வந்தான்? நீயாக ஒரு நாற்காலி செய்து இதுதான் முதலமைச்சர் நாற்காலி என்று நினைத்திருக்கலாம்! அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு புளுகுவதில் நீ 'கேடி'யையும் மிஞ்சி விட்டாய்! சரி? அந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு ஆதரவாக நீ பிரச்சாரம் செய்தாய்? எத்தனை பொதுக் கூட்டங்களில் நீ பேசினாய்?
அப்போது முதல்வராக இருந்த ஜெயா குடியிருந்த போயஸ் தோட்ட சாலையில்தான் உனது வீடும் உள்ளது! அவர் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பும், சென்றபின் ஒரு மணி நேரம் வரையிலும் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பது உலகறிந்த விஷயம்!
உனது காரும் ஒரு நாள் நிறுத்தப்பட்டது! அதை எதிர்த்து நீ காவலருடன் தர்க்கம் செய்த விஷயம் அம்மையார் காதுக்கு சென்றது! அந்த தெருவுக்குள் நீ எப்போதுமே காரில் வரக்கூடாது, நடந்துதான் வரவேண்டும் என்று அம்மையார் உத்தரவு போட்டதால், அலறி அடித்திக்கொண்டு "காப்பாற்றுங்கள்" என்று தலைவர் கலைஞரின் காலில் விழுந்தாய்!
1996 தேர்தல் சமயத்தில், ஜெயாவை நேரடியாக எதிர்த்து பிரச்சாரம் செய்யத் துணிவில்லாமல், "மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது!" என்று ஒற்றை வரியை மட்டும் சொன்னாய்! இதைத் தவிர திமுக கூட்டணி வெற்றிபெற ஒரு சிறு துரும்பாவது நீ கிள்ளிப் போட்டாயா? எனவே, உன்னால்தான் அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்று இப்போது நீ சொல்வதை மூளை இல்லாதவர்கள்கூட நம்ப மாட்டார்கள்!
இப்போது 2004 பாராளுமன்ற தேர்தலுக்கு வருவோம்! அந்தத் தேர்தலில் நீ பகிரங்கமாகவே பாஜக, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தொலைக் காட்சிகளில் பிரச்சாரமும் செய்தாய்! காங்கிரஸ், திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிரணியில் இருந்தன! உன்னுடைய பிரச்சாரத்தையும் மீறி அந்தத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது! நீ ஆதரித்த பாஜக, அதிமுக கூட்டணிக்கு ௦. முக்கியமாக நீ உனது ரசிகர்களுக்கு விடுத்த கட்டளையான பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது என்றதை மீறி, பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது! இப்போது சொல்! தமிழ்நாட்டில் உனக்கு என்ன அரசியல் செல்வாக்கு இருக்கிறது?
உனக்கு செல்வாக்கும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது! படத்தில் நடிக்க சில கோடிகள் வாங்கிய உன்னை, அரசியல் கட்சி ஆரம்பித்து தங்களை ஆதரிக்க வேண்டும் என்கிற நிபந்தனையில் தற்போது ஆட்சியில் இருக்கும் பார்ப்பன ஜாதி வெறியர் கட்சி ஒன்று பல ஆயிரம் கோடிகள் கொடுத்து உன்னை தூண்டி விடுகிறது! பணத்திற்காக சினிமாவில் நடித்த நீ, பணத்திற்காக இப்போது அரசியலிலும் நடித்துக்கொண்டு, நான்தான் அடுத்த சி.எம். என்று சொல்லிக்கொண்டு திரிகிறாய்! உன் எண்ணம் ஒரு காலத்திலும் ஈடேறப் போவதில்லை! கூடிய விரைவில் நான்தான் சி.எம்.என்று கத்திக்கொண்டு, சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவில் இறங்கி ஓடப்போகிறாய்! அதுதான் நடக்கப் போகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக