வெள்ளி, 16 மார்ச், 2018

சாதி மறுப்பு – காதல் திருமணங்களை ஒழிக்க எடப்பாடி அரசு .. கிரிஜா வைத்தியநாதன் ....


மிழகத்தில் இனி காதல் திருமணங்கள் பெற்றோர் அனுமதியின்றி நடக்க முடியாதவாறு புதிய விதிகளை திருமண பதிவாளர் அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது எடப்பாடி அரசு.
கடந்த செப்டம்பர் 28, 2017 அன்று இது குறித்த உட்சுற்றறிக்கை ஒன்று பதிவுத்துறை ஐ.ஜி அலுவலகத்தில் இருந்து அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், இந்துத் திருமண சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்கையில் மேலும் சில முக்கிய விதிகளைப் பின்பற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு.
இதன்படி திருமணப் பதிவின் போது ஏற்றுக் கொள்ளத்தக்க அடையாள அட்டைகளின் பட்டியலில் ஆதாரையும் இணைத்துள்ளது. அடுத்ததாக, பெற்றோர், சாட்சிகள் மற்றும் தம்பதிகள் சமர்ப்பிக்கும் அடையாள அட்டையின் அசலை வைத்து சரிபார்த்த பின்னர்தான் திருமணம் பதிவு செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறது.

இதன்படி, இனி காதலித்து பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்பவர்கள் யாரும் இனி பதிவு செய்ய முடியாது. அவர்களது திருமணத்திற்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் கிடைக்காது. இதனை அடிப்படையாக வைத்து பல பதிவாளர் அலுவலகங்களில் பெற்றோர்கள் நேரடியாக வரவேண்டும் என்பதை முக்கிய நிபந்தனையாக வைக்கின்றனர்.
இதற்கு முன்னர் திருமணம் பதிவு செய்ய 3 சாட்சிகளின் கையெழுத்தும் அவர்களது அடையாள அட்டையின் நகலும் இருந்தால் போதும். ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த விதிகளின்படி இனி பெற்றோரின் அடையாள அட்டைகளின் அசல் காட்டப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட பின்னர்தான் திருமணம் பதிவு செய்யப்படும்.
வயதுக்கு வந்த இருவர் திருமணம் செய்ய பெற்றோரின் சம்மதம் தேவை என்பதை நேரடியான வார்த்தைகளில் இல்லாமல், நரித்தனத்தோடு பெற்றோர் இல்லாமல் இந்து திருமண சட்டப்படி பதிவு செய்ய இயலாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது பாஜக -வின் அடிமை எடப்பாடி அரசு.
இது குறித்து ‘தி ஹிந்து’ நாளிதழ், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை தொடர்பு கொண்டு கருத்துக் கேட்கையில், இது பெற்றோரின் சம்மதத்தை மறைமுகமாக உறுதிபடுத்தும் விதி என்றும் வயது வந்தோர் இருவர் திருமணம் செய்யும் போது பெற்றோரின் சம்மதம் தேவை என்பதை பதிவாளர் வலியுறுத்தமுடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் இந்து திருமணச் சட்டம் முதலில் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் சம்மதத்தையே உறுதிப்படுத்தவில்லை என்றும், இந்து திருமணச் சட்டத்தின் படி பெண் என்பவள் தகப்பனால், கன்னிகாதானம் செய்யப்படும் பொருளாகவே இருக்கிறாள் என்றும் கூறியிருக்கிறார்.

மத்தியில் ஆளும் பாஜகவின் எடுபிடியான எடப்பாடி அரசையும், கிரிஜா வைத்தியநாதனின் தலைமையிலான தலைமைச் செயலகத்தையும் உபயோகித்து தனது சாதிய வர்ணாசிரம கொள்கையை நிலை நிறுத்தும் அத்தனை வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது ஆர்.எஸ்.எ.ஸ் கும்பல்.
சுயமரியாதை வளர்ந்த மண்ணில் இந்த நச்சுப் பாம்புகள் புழக்கடை வழியே உள்நுழையப் பார்க்கின்றன. பெரியார் சிலையை உடைப்பேன் என பார்ப்பனப் பொறுக்கிகள் கொக்கரித்ததற்கு கொதித்தெழுந்த தமிழகம், பெரியாரின் கொள்கைகளை ஒழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பனக் கும்பலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது ? இனி ஆணவக் கொலைகளை செய்யும் ‘கடமையிலிருந்து’ ஆதிக்க சாதி பெற்றோரை விடுவித்திருக்கிறது இந்த உத்தரவு. ஆகையால் காதலர்கள் இனி தமது காதல் நிறைவேறவேண்டுமென்றால் அரசியல் அரங்கில் போராடாமல் வழியில்லை!  வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக