வியாழன், 29 மார்ச், 2018

கேரளா ... விபத்துக்குள்ளான மூதாட்டியை கண்டுகொள்ளாத மனிதர்கள் ....

தினத்தந்தி:  திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த மூதாட்டியை அப்பகுதியில் செல்வோர் யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது கடக்காவூர் என்னும் பகுதி. இங்கு உள்ள சாலை ஒன்றில் 65 வயது மூதாட்டி ஒருவர் சாலையில் செல்லும் பொழுது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயங்களுடன் சாலையில் நடுவில் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். ஆனால் அவரைக் காப்பாற்ற அங்கிருந்த யாரும் முன்வரவில்லை.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் அந்த மூதாட்டியை காப்பாற்றாமல், வெறுமனே வேடிக்கைப் பார்த்துவிட்டு கடந்து சென்று கொண்டிருந்தனர். இறுதியில் அவ்வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் மூதாட்டியை காப்பாற்ற முன்வந்தார்.

அந்தச் சமயத்தில் சரியாக காவல் துறை வாகனம் ஒன்று வந்தது. உடனடியாக மூதாட்டி அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துளியும் மனிதநேயம் இன்றி அப்பகுதி மக்கள் நடந்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக