வியாழன், 29 மார்ச், 2018

திருப்பதி கோவிலில் தீ... லட்டு தயாரிப்பு மண்டபத்தில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு ...


மாலைமலர் :திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதியில் லட்டு தயாரிக்கும் அறையில் திடீர் தீ விபத்து திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள பெருமாளை காண தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இதனால் திருப்பதியில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
 இந்நிலையில், திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதி கோவிலின் லட்டு தயாரிக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக