ஞாயிறு, 11 மார்ச், 2018

உ.பி.,யில் பகுஜன் சமாஜுக்கு காங்., ஆதரவு.. அதிரடி திருப்பம்.

Siva Bsp i லக்னோ:< உ.பி., அரசியலில் புதிய திருப்பமாக, இம்மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜ் வேட்பாளரை ஆதரிப்பதென, காங்., முடிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில், 10 ராஜ்யசபா, எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், 23ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், நாளையுடன் முடிகிறது. இத்தேர்தலில்,
பெகன்ஜி மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் சார்பாக, பீம்ராவ் அம்பேத்கர், வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
காங்., ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
உ.பி., சட்டசபை, காங்., தலைவர், அஜய் சிங் லல்லு, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கைகோர்க்க முடிவு, சர்வாதிகார, மதவாத அரசியலுக்கு எதிராக, மதச்சார்பற்ற கட்சிகளுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளோம்.
ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவளிப்பர். இது தொடர்பாக, காங்., தலைவரிடம் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர்கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக