ஞாயிறு, 11 மார்ச், 2018

ஸ்ரீதேவியுடன் கடைசி நிமிடத்தில் இருந்த தங்கை எங்கே, ஏன் அமைதியாக இருக்கிறார்?

ஏன்?
அமைதி siva.- Oneindia Tamil : மும்பை: ஸ்ரீதேவி இறக்கும்போது அவருடன் துபாயில் இருந்த அவரின் தங்கை ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் நடிகை ஸ்ரீதேவி. திருமணம் முடிந்து பலரும் மும்பை திரும்பியபோது அவரும், அவரின் தங்கை ஸ்ரீலதாவும் துபாயிலேயே இருந்தனர்.
கடந்த 24ம் தேதி ஸ்ரீதேவி மது போதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
ஸ்ரீதேவியின் தங்கை ஏன் அக்காவின் இறுதிச் சடங்கு, பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள பாலிவுட்காரர்கள் ஆர்வமாக...< ஸ்ரீதேவியின் தங்கை ஏன் அக்காவின் இறுதிச் சடங்கு, பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள பாலிவுட்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். ஸ்ரீலதா மிஸ்ஸானது பலருக்கும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
ஸ்ரீதேவி விஷயம் பற்றி யாரிடமும் பேசாமல், யார் கண்ணிலும் படாமலும் இருக்குமாறு ஸ்ரீலதாவிடம் குடும்பத்தார் கூறியுள்ளனர் என்று கபூர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
 பங்களா ஸ்ரீலதாவை ஏன் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர் என்பது புரியவில்லை. சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் பங்களாவை ஸ்ரீலதா மற்றும் அவரின் கணவர் சதீஷின் பெயருக்கு எழுதிக் கொடுக்க முடிவு செய்துள்ளனர் என்று கபூர் குடும்பத்திற்கு நெருக்கமான நபர் கூறியுள்ளார். ஏன்?
ஸ்ரீதேவியின் திடீர் மரணம் குறித்து துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஸ்ரீலதா அமைதி காப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக