வெள்ளி, 2 மார்ச், 2018

மு க முத்து மீது மகள் ஷீபா ராணி ஆட்கொணர்வு மனு .... அறிவுநிதி ரவுடிகளோடு வந்து .....

D.M.K,karunanidhi,கருணாநிதி,தி.மு.க,முத்து
தினமலர் :சென்னை : தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மூத்த மகன், முத்துவை ஆஜர்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த, ஷீபா ராணி தாக்கல் செய்த மனு: என் தாயாருக்கும், கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவுக்கும், 1988ல் திருமணம் நடந்தது. இந்து மத சடங்கின்படி, இரு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில், இந்த திருமணம் நடந்தது. கோபாலபுரம் வீட்டில், திருமண வாழ்க்கையை துவக்கினர்.
1991 ஜூன், 17ல், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், நான் பிறந்தேன். 10 ஆண்டுகள், கோபாலபுரம் வீட்டில் வசித்தோம். அதன்பின், ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டுக்கு மாறினோம். n>என் தந்தையின் முதல் மனைவியின் மகன், அறிவுநிதி, ரவுடிகளுடன் வந்து, எங்களை தாக்கினார். வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். அந்த வீட்டில் இருந்து, என்னையும், தாயையும் வெளியேற்றினர்.
பின், சிலர் எங்களுக்கு உதவினர்; ஆவடியில் தங்கினோம். பாலவாக்கத்தில் இருந்த தந்தையை, நாங்கள் சந்தித்தோம். அப்போதும், ரவுடிகளுடன் அறிவுநிதி வந்து, எங்களை தாக்கினார்; மிரட்டல் விடுத்தார். அப்போது, என் தந்தை குறுக்கிட்டு, எங்களை தாக்க வேண்டாம் என, தெரிவித்தார். அதன்பின், அந்த இடத்தை விட்டு நாங்கள் அகன்றோம். நீண்ட நாட்களாக, என் தந்தையை சந்திக்க, எங்களை அனுமதிக்கவில்லை.


நாங்கள் ஏழ்மை நிலையில் உள்ளோம். பலமுறை புகார்கள் அளித்தும், எந்த பலனும் இல்லை. 2009 - 2014 வரை, எங்களால் அவரை சந்திக்க முடியவில்லை. பின், 2015ல், திருவாரூர் மாவட்டத்தில், தந்தையை சந்தித்தோம். அறிவுநிதியின் மிரட்டலால், சென்னை திரும்பினோம்.

மூன்று ஆண்டுகளாக, தந்தையை சந்திக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், பலன் இல்லை. என் தந்தை உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது, சந்தேகமாக உள்ளது.
அவரை, சட்டவிரோத காவலில், மறைத்து வைத்திருக்கலாம். அவரை கண்டுபிடிக்கும்படி, போலீசுக்கு புகார் அனுப்பினேன். அறிவுநிதிக்கு ஆள் பலம், பண பலம் இருப்பதால், எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, 75 வயதாகும் என் தந்தை, மு.க.முத்துவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விடுவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள், சி.டி.செல்வம், சதீஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சென்னை போலீஸ் கமிஷனர், மயிலாப்பூர் மற்றும் கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக