வெள்ளி, 2 மார்ச், 2018

திருப்பதி ஆஞ்சநேயபுரத்தில் 84 தமிழர்கள் கைது.. செம்மரம் வெட்ட வந்தததாக ஆந்திர போலீஸ்

: Kalai Mathi  Oneindia Tamil திருப்பதி: ஆஞ்சநேயபுரத்தில் 84 தமிழர்களை ஆந்திர போலீசார்
கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் அதிகளவு செம்மரங்கள் காணப்படுகின்றன. இந்த செம்மரங்களை அப்பாவி தமிழர்கள் பலரை பண ஆசை காட்டி பயன்படுத்தி பலர் வெட்டி கடத்தி வருகின்றனர். அண்மையில் ஆந்திரமாநிலம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். செம்மரம் வெட்ட வந்தவர்கள் போலீசாரிடமிருந்து தப்பிக்க எரியில் குதித்து உயிரிழந்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசாரே தமிழர்களை அடித்துக்கொன்று ஏரியில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திருப்பதி ஆஞ்சநேயபுரத்தில் 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 84 பேரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைதானவர்களை திருப்பதிக்குக் கொண்டு சென்று செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக