செவ்வாய், 13 மார்ச், 2018

சந்திரபாபு நாயுடு : தெற்கில் கிடைக்கும் வருமானத்தை வடக்கில் செலவு செய்யும் மத்திய அரசு !

chandrababu-naiduதினமணி :ஹைதராபாத்:;மத்திய அரசு தெற்கில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வடக்கில் செலவு செய்து வருகிறது  என்று ஆந்திர சட்டப்பேரவையில் முதலவர் சந்திரபாபு நாயுடு சாடியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக செவ்வாயன்று ஆந்தூர சட்டப்பேரவையில் பேசும் பொழுது அவர் மத்திய அரசு தெற்கில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வடக்கில் செலவு செய்து வருகிறது  என்று குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது  
ஆந்திர மாநிலப் பிரிவின் போது மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து ஆந்திர பிரதேசம் புறக்கணிக்கப்படுகிறது. பொதுவாகவே மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளது, ஆனால் அவ்வாறு கிடைக்கும் வருவாயானது வடமாநிலங்களின் வளர்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஆந்திர பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி கிடையாதா? ஏன் இந்த பாகுபாடு காட்டப்படுகிறது? தொழில்துறை வரி சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி ரிபண்ட் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிலையில், ஆந்திராவிற்கு மட்டும் அது ஏன் மறுக்கப்படுகிறது?
வருவாயில் மத்திய அரசின் பணம் மற்றும் மாநில அரசின் பணம் என்றெல்லாம் கிடையாது. வருமானம் அனைத்தும் இந்திய மக்களுடையது.
மக்களின் உணர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துளார். உணர்ச்சியின் அடிப்படையில் மாநிலத்தை பிரிக்க முடியும்போது, அதே உணர்ச்சியின் அடிப்படையில் ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது?
மத்திய அரசு தருவதாக வாக்குறுதி அளித்த நிதியை மட்டுமே நாங்கள் கேட்கிறோம், கூடுதலாக எதுவும் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக