செவ்வாய், 13 மார்ச், 2018

ஜெயா பச்சன் ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி.

rich Rajya Sabha MP,actress Jaya Bachchan,Amitabh Bachchan ,ரூ.1000 கோடி சொத்து,  பணக்கார ராஜ்யசபா எம்.பி., நடிகை ஜெயா பச்சன், சமாஜ்வாதி கட்சி, நரேஷ் அகர்வால் , ராஜ்யசபா தேர்தல் , ரவீந்திரா கிஷோர் சின்கா,  ஜெயாபச்சன் அமிதாப்பச்சன் தம்பதி, 
Rs 1000 crore property,   Samajwadi Party, Naresh Agarwal, Rajya Sabha election, Ravindra Kishore Sinha, Jaya Bachan Amitabh Bachchan couple,தினமலர் :புதுடில்லி: உ.பி.யில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.தேர்தலில் நடிகை ஜெயாபச்சன்,63 வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தனக்கு கிடைக்கும் என நினைத்த மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் விரக்தியடைந்த பா.ஜ.விற்கு தாவினார்.
இந்நிலையில் ஜெயாபச்சன் தனது வேட்பு மனு தாக்கலி்ல் தனக்கு ரூ. 1000 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்:< * ஜெயாபச்சன் மற்றும் அமிதாப்பச்சன் தம்பதியினருக்கு ரூ. 460 கோடி அசையா சொத்துக்களும், ரூ.650 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளன. தவிர நொய்டா, போபால், லக்னோ, அகமதாபாத்,காந்திநகரில் நிலங்கள்.

* அமிதாப்பின் நகைகளின் மதிப்பு ரூ. 36கோடி எனவும், ஜெயாபச்சன் நகைகளின் மதிப்பு ரூ. 26 கோடி


* இருவருக்கும் 12 கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 13 கோடி.

*ஜெயாபச்சனுக்கு லக்னோவில் 1.22 ஹெக்டேரில் விவசாய நிலங்கள்.இவற்றின் மதிப்பு ரூ. 2.2 கோடி. என ஜெயாபச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி. இவ்வாறு அதில் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.வைச் சேர்ந்த ரவீந்திரா கிஷோர் சின்கா என்பவர் வேட்பு மனு செய்த போதுஅவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி எனவும் அந்த சாதனையை ஜெயா பச்சன் முறியடித்து மிகவும் பணக்கார ராஜ்யசபா எம்.பி. என்ற பெருமை பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக