ஞாயிறு, 11 மார்ச், 2018

ராகுல்காந்தி : எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும்

நான் அந்தப் பாதுகாவலர்களுடன் பேட்மின்டன்
விளையாடி இருக்கிறேன். அவர்களே என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் ரெண்டு கண்ணால் பார்த்தேன்.
எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் –
எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும்
முன்கூட்டியே தெரியும்.
இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன்
தீய சக்திகளுக்கு எதிராக நிற்கும்போது
நீங்கள் கொல்லப்படுவது தானாகவே நடந்துவிடுகிறது.
அப்படிதான் எனது பாட்டியும் அப்பாவும் இறந்தார்கள்.
தான் இறந்துவிடுவேன் என்று என் பாட்டி இந்திராகாந்தி என்னிடம் சொன்னார். இந்த அரசியலை உணர்ந்திருந்த நான், “நீங்கள் இறந்து விடக்கூடும் அப்பா” என்று அப்பாவிடம் சொன்னேன்.
ஸ்ரீபெரும்புதூரில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது
நான் ஹார்வார்டில் இருந்தேன்.
தேர்தல் பிரசாரம் தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன.
அது மிகவும் பிரச்னையான தேர்தல் என்பதும் –
அப்பா தேர்தல் பிரச்சாரத்துக்காக வருவது ஆபத்தானது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்.

ஹார்வார்டில் எனக்கு திடீரென்று ஒரு போன்,
எனது அப்பாவின் நண்பருடைய நண்பர் ஒருவர் அழைத்தார். “ராகுல்! உனக்கு ஒரு கெட்ட செய்தி…” என்றார்.
என்னால் அந்தச் செய்தியை ஊகிக்க முடிந்தது. “இறந்துவிட்டாரா?” என்று கேட்டேன். ”ஆம்!”, என்றார். அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.
அரசியலில் இருக்கும்போது கண்ணுக்குத் தெரியாத
பல சக்திகளுடன் நாம் போராட வேண்டி இருக்கிறது.
அதுபற்றிப் பொதுமக்களுக்கும் தெரிவதில்லை.
அதனால் நம்மீது வேறு மாதிரியான பிம்பம் படிகிறது.
அப்பா மரணத்துக்குப் பிறகு மிக நீண்ட காலம் எனக்குள்ளும் பிரியங்காவிற்குள்ளும் அந்தக் கோபம் அப்படியே இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அது மாறத் தொடங்கியது.
இலங்கையில் – பிரபாகரனின் இறந்த உடலைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது
உண்மையில் எனக்குள் மகிழ்ச்சிதான்
ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லையா?
ஆனால், ‘ஏன் இவர்கள் பிரபாகரனை அவமானப்படுத்துகிறார்கள்?’ என்றுதான் தோன்றியது.
அவரின் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்குமாக வருந்தினேன். பிரியங்காவும் அதே சிந்தனையில்தான் இருந்தாள்.
காரணம், எங்களால் நாணயத்தின்
மற்றொரு பக்கத்தையும் பார்க்க முடிந்தது.
ஒவ்வொரு வன்முறை நிகழும்போதும் ஒரு குடும்பம் –
அதன் குழந்தைகள் – அந்தச் சமூகம் என அத்தனையும் பாதிக்கப்படுகிறது. இதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.
எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை.
ஆமாம், நாங்கள் முழுவதுமாக எங்கள் அப்பாவைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டோம். www.sooddram.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக