புதன், 7 மார்ச், 2018

ரஜினியின் எம்ஜியார் புராணம் ... அத்தனையும் பொய் ....

அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்து எம்ஜியாருக்கும் தனக்கும் ரொம்பவே நெருங்கிய தொடர்பு உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த், கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டதாக விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, நேற்று மாலை ரஜினிகாந்த் திறந்துவைத்தார்.
அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது. எம்ஜிஆர் ஆதரவு வாக்குகள்
மூத்த அரசியல்வாதியும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தவருமான ஏ.சி.சண்முகத்தின் கல்லூரி அது என்பதால் கண்டிப்பாக ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் உரையை நிகழ்த்துவார் என கூறிவந்தனர் அரசியல் விமர்சகர்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் ரஜினிகாந்த்தின் பேச்சு இருந்தது. எம்ஜிஆர் ‘பக்தர்களின்’ வாக்குகளை குறிவைத்தே ரஜினிகாந்த் பேச்சின் பெரும்பகுதி அமைந்திருந்தது. எம்ஜியாருக்காகவே ஓட்டு

எம்ஜிஆருக்காகவே அதிமுகவுக்கு வாக்களிக்கும் வயதான ஆண்களும், பெண்களும் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் பெருமளவிற்கு உள்ளனர்.
எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் பேச முடியாதபடி படுத்தபடுக்கையாக சிகிச்சை பெற்றபோதுகூட அவருக்காக ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்கள்தான் இந்த வாக்காளர்கள். எனவேதான் ஜெயலலிதா அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு முதலில் எம்ஜிஆரை முன்னிறுத்தி வாக்குவேட்டையாடினார்.
பிறகு தன்னை மட்டுமே கட்சியின் பேனர், போஸ்டர்கள் என அனைத்திலும், முன்னிறுத்தி, அடுத்த எம்ஜிஆர் தான்தான் என்பது போல காட்டிக்கொண்டார். அரசியல் வாரிசு இப்போது அதுபோன்ற ஒரு ஸ்டார் பிம்பம் அதிமுகவில் இல்லை. எனவே எம்ஜிஆரின் அரசியல்வாரிசாக தன்னை காண்பித்துக்கொண்டு அவரது ஆதரவாளர்கள் வாக்குகளை ஈர்ப்பதே ரஜினிகாந்த் திட்டம்
. ஆனால், எம்ஜிஆர் ஆட்சி காலத்தை பார்த்த பல முதியவர்களுக்கும், ரஜினிக்கும், எம்ஜிஆருக்கும் பெரிதாக நல்ல உறவு இல்லை என்பதே மனதில் நிழலாடும் அம்சம். இந்த மனப்பாங்கை உடைக்கவே, எம்ஜிஆருக்கு, ஜெயலலிதாவைவிட அதிமாக புகழாரம் சூட்டினார் ரஜினிகாந்த்.
தனிப்பட்ட நட்பாம் எம்ஜிஆரின் சமூக பிம்பத்தை மட்டுமே புகழ்ந்தால் எல்லோரையும்போல தானும் புகழ்வதாகவே நினைப்பார்கள் என்பதை அறிந்திருந்த ரஜினிகாந்த், எம்ஜிஆருக்கும் தனக்கும் தனிப்பட்ட அளவில் மிகுந்த நெருக்கம் இருந்ததாக பேச்சின்போது ‘அள்ளிவிட்டார்’.
ரஜினிகாந்த் உச்சநடிகராக வளர்ந்து வந்த நேரத்தில் நடிப்பு துறையில் இருந்து விடைபெற்று முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர். அப்போது இவ்விருவருக்குமே நெருக்கமான நட்பு இல்லை என்பது மூத்த தலைமுறைக்கு நன்கு தெரிந்த விஷயம்.
எம்ஜிஆருடன் நெருக்கமாம்
ஆனால் ரஜினிகாந்த்தோ, தன்னைபற்றி தனது மனைவி லதா குடும்பத்தாரிடம் நல்லபடியாக சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவைத்தது எம்ஜிஆர் என்றார். ராகவேந்திரா மண்டபம் அமைய காரணம் எம்ஜிஆர் என்றும் தெரிவித்தார். தனது உடம்பை நன்கு கவனித்துக்கொள்ளும்படி எம்ஜிஆர் கூறியதாகவெல்லாம் கூறினார் ரஜினிகாந்த்.
பரபரப்பு செய்திகள் தெரியுமா?
ஆனால், 1978ம் ஆண்டில் நரம்பியல் பிரச்சினை என கூறி ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலை என்ன என்பதும், அப்போது எம்ஜிஆர்-ரஜினிகாந்த் நடுவே என்ன மாதிரி உறவு இருந்தது என்பதும் பல ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக வெளியானவை.
இதை படித்த அப்போதைய தலைமுறை ரஜினிகாந்த் பேச்சை கேட்டு ஷாக்காகினர் என்றுதான் கூற வேண்டும். இந்த பேச்சை பார்த்துவிட்டுதான், “பொய் சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் எல்லாம் சொல்ல கூடாது” என்ற கவுண்டமணி டயலாக்கை போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
எம்ஜிஆர் ஆட்சி என்றால்?
ரஜினிகாந்த் கூறியது உண்மையா, பொய்யா என்ற விமர்சனங்கள் ஒருபக்கம் என்றால், எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என ரஜினிகாந்த், கூறுவதும் கூட சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்ஜிஆர் ஆட்சிக்கு வாக்களித்தவர்கள் யார்? எது உண்மை எது பொய், கொள்கை என்ன என்ற எந்த கேள்வியும் கேட்காமல், திரையில் பார்த்த நடிப்பை நிஜம் என நம்பி வாக்களித்தவர்கள்.
அதேபோன்ற ஆட்சியை தரப்போகிறேன் என ரஜினி கூறியிருப்பதன் மூலம், தமிழகத்தில் கொள்கை சார்ந்த, வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு தான் தயார் இல்லை என்பதை ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக