செவ்வாய், 27 மார்ச், 2018

சசிகலா புஷ்பா தடையை மீறி டெல்லியில் திருமணம்

முன்னாள் மேயரும் தற்போதைய மாநிலங்களவை எம்பியுமான சசிகலா புஷ்பாவிற்கு டெல்லியில் திருமணம் நடந்துள்ளது. துாத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயரும் தற்போதைய மாநிலங்களவை எம்பியுமான சசிகலா புஷ்பா தனது கணவரான லிங்கேஷ்வர திலகனை சில தினங்களுக்கு முன்பாக விவாகரத்து செய்தார். டெல்லியில் வசிக்கும் வக்கீல் ராமசாமியை இன்று திருமணம் செய்தார்.இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்களும் கலந்து கொண்டனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் சசிகலாபுஷ்பாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.< வழக்கறிஞர் ராமசாமி என்பவரை 26ஆம் தேதி சசிகலா புஷ்பா மறுமணம் செய்யப்போவதாக சமூகவலைத்தளங்களில் அழைப்பிதழ் பரவியது.
இது தொடர்பாக சசிகலா புஷ்பா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ராமசாமியின் மனைவி சத்யபிரியா இது தொடர்பாக மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவின் திருமணத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தது எனினும் திட்டமிட்டபடி சசிகலா புஷ்பா ராமசாமியின் திருமணம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக