வியாழன், 8 மார்ச், 2018

கர்ப்பிணி பலியாக காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது

Siva - Oneindia Tamil திருச்சி: திருச்சியில் கர்ப்பிணி பலியாக காரணமான இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவர் தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்க்கிறார். அவர் மனைவி உஷா(36). திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் உஷா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் ஆனார். 
Pregnant lady dies: Traffic cop held in Trichy ராஜா தனது மனைவியுடன் பைக்கில் நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சி நோக்கி வந்தார். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். ஹெல்மெட் அணியாமல் வந்த ராஜாவை பைக்கை நிறுத்தச் சொல்ல அவர் அதை கவனிக்காமல் சென்றுவிட்டார். உடனே காமராஜ் தனது ஜீப்பில் விரட்டிச் சென்று திருச்சி-தஞ்சை சாலையில் உள்ள பாய்லர் ஆலை ரவுண்டானா அருகே ராஜாவின் பைக்கை வழிமறித்தார். 
ஜீப்பில் இருந்து இறங்கி வந்த காமராஜ் பைக்கை வேகமாக எட்டி உதைத்தார். இதில் ராஜா, உஷா இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த வேன் உஷா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். 
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். உடனே காமராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். காமராஜை கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். வ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக