புதன், 14 மார்ச், 2018

உபி கோரக்பூர், புல்புர் மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க.வை வீழ்த்தி சமாஜ்வாதி வெற்றி பெற்றது

பிந்திய செய்தி :உ.பி. புல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி
மாலைமலர் ::உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகாரின் அராரியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் தோல்வி முகத்தில் உள்ளனர். உ.பி, பீகார் மக்களவை இடைத்தேர்தல் - 3 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு இறங்கு முகம் லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகாரின் அராரியா மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுமார் 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். புல்புர் தொகுதியிலும் சமாஜ்வாதி வேட்பாளர் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பீகாரின் அராரியா மக்களவை தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் 21 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளார். #LokSabhaByPoll #Gorakhpur #PhulpurByPoll

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக