ஞாயிறு, 18 மார்ச், 2018

2019 தேர்தல் உபியிலும் பிகாரிலும் பாஜகவின் கதை முடிகிறது ... மாயாவதி, அகிலேஷ், லாலு கூட்டணி புதிய எழுச்சி


BBC : ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து
ஆந்திராவில் காலூன்றுவது பா.ஜ.கவின் புதிய அரசியல் கணக்கா?<>ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய தெலுங்குதேசம் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டது. கடந்த வாரம், தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அமைச்சர்கள் இருவரும் ராஜிநாமா செய்தனர். அதன்பிறகு, மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மோதி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்தது.
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால், தனது கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏப்ரல் ஆறாம் தேதியன்று பதவி விலகுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
மார்ச் 19ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக தெலுங்கு தேசம் தெரிவித்துள்ளது "மார்ச் 19ஆம் தேதியன்று 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்னெடுப்போம்" என்று தெலுங்கு தேசம் கட்சி கூறியது.re>பாரதிய ஜனதா கட்சியை இலக்கு வைத்து பேசிய ஆந்திர பிரதேச மாநில அமைச்சர் கே.எஸ் ஜவாஹர், "பா.ஜ.க தெலுங்கு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் போகிறோம்" என்றார்.

மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவேண்டுமென்றால் குறைந்தது 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், உண்மையான நிலைமை என்னவென்றால் மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையை கொண்டுள்ள மோதியின் அரசுக்கு இந்தத் தீர்மானம் பெரியளவிலான தாக்கம் எதையும் ஏற்படுத்தாது.ஆனால், சந்திரபாபு நாயுடுவின் இந்த அரசியல் நகர்வு, ஆந்திர அரசியலில் மிகவும் சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை ஜன் சேனா கட்சியின் பவன் கல்யாண் முன்வைத்தால், இந்த குற்றச்சாட்டுகள் "அடிப்படை ஆதாரமற்றது" என்று மறுக்கும் தெலுங்கு தேசம் கட்சி, தங்கள் கட்சியை பலவீனமாக்கும் பெரிய சதித்திட்டம் நடைபெறுகிறது என்று எதிர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் பவன் கல்யாண், தலைநகர் புதுடெல்லியில் இருந்து எழுதப்பட்ட திரைக்கதைக்கு சிறப்பாக நடிக்கிறார் என்று தெலுங்கு தேசம் கட்சி விமர்சிக்கிறது. பா.ஜ.க.வின் மத்திய தலைமையின் மறைமுக குறிப்பை மேற்கோள் காட்டி பேசும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் நடத்திய அரசியல் நாடகத்தை ஆந்திரப் பிரதேசத்தில் நடத்த முடியாது என்று எச்சரித்தார்.
தென்னிந்தியாவில் கட்சியை விரிவுபடுத்தும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் திட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய அரசியல் நகர்வுகள் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆந்திராவில் பலவீனமாக இருக்கும் பா.ஜ.க, எழுந்து நிற்க வேண்டுமானால், அந்த மாநிலத்தில் வலுவாக இருக்கும் எதாவது பிராந்தியக் கட்சியை அது ஊன்றுகோலாக பற்றிக் கொள்ளவேண்டும்.

அடல் பிஹாரி வாஜ்பாயியின் காலத்தில் இருந்தே சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தார். அடுத்த ஆண்டு மாநிலத்தில் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், பிராந்திய அரசியலின் போக்கை கருத்தில் கொண்டு, அதற்கு முன்னதாக தே.ஜ.கூட்டணியில் இருந்து பிரிய முடிவெடுத்திருக்கிறார். அவரது இந்த முடிவின் பின்னணியில் வேறு எதாவது அரசியல் காரணம் இருக்கிறதா?
கடந்த சில நாட்களில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் ஆச்சரியம் அளிக்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் உமர் ஃபரூக் கூறுகிறார்.
உமரின் கருத்துப்படி, "கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தின் அரசியல் சூழல்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்து வெளியேறும் முடிவின் பின்னணியில் இருப்பது ஜெகன் மோகன் ரெட்டி. தெலுங்கு தேசம் கட்சிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவு அதிகரிக்காமல் இருக்கவும், தற்போதைய தனது வலுவான நிலையை தக்கவைத்து கொள்வதற்காகவும் சந்திரபாபு நாயுடு அவசர கூட்டத்தை கூட்டி தே.ஜ.கூட்டணியில் இருந்து பிரியும் முடிவை எடுத்தார்."ure>ஆந்திராவில் பா.ஜ.கவுக்கு சிக்கல்கள் அதிகரித்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ராதிகா ராமசேஷன் கூறுகிறார். "ஆந்திரப் பிரதேசத்தில் பா.ஜ.கவின் பலம் குறைவுதான். தற்போதைய நிலையில் தெலுங்கு தேசம் அல்லது ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுடன் கூட்டாக அவர்கள் செயல்படமுடியாது என்ற நிலையில் பா.ஜ.க தனித்தீவாகிவிட்டது என்று தோன்றுகிறது."
ஆனால், ஆந்திராவுக்கு வெளியே, சந்திரபாபுவின் முடிவால் அரசியலில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படாது என்றே தோன்றுகிறது.
உமர் ஃபரூக் இவ்வாறு கூறுகிறார், "தென்னிந்தியாவில் இந்த முடிவு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தற்போது அரசியலில் பெருமளவிலான கொந்தளிப்பு இருக்கிறது. தென்னிந்திய அரசியலில் மாநிலத்தின் அடையாளம், முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற பிரச்சனை உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா இதை முக்கிய பிரச்சனையாக முன்வைக்கிறார்"
"தென்னிந்தியாவில் எந்தவொரு தேசிய அரசியல் கட்சியும் வலுவாகவும் இல்லை, தொண்டர் பலமும் இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் தேசிய கட்சிகள் கணிசமான வெற்றியை பெறுவது கடினம். வட இந்தியாவில் 2019இல் பா.ஜ.கவின் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால், அதை தென்னிந்தியா ஈடுகட்டும் என்று அந்த கட்சி எதிர்பார்க்கமுடியாது" என்கிறார் உமர்.< />பாரதிய ஜனதா கட்சி மத்தியில் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளின் ஆதரவு அவசியம் இல்லை என்றபோதிலும், 2019 பொதுத் தேர்தல்களை கணக்கில் கொண்டு, அமித் ஷா மற்றும் மோதி கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
2014 தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது மோதி அரசுக்கு கடினமானது, எனவே மக்களின் சீற்றத்தை பா.ஜ.க எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உமர் ஃபரூக் கருதுகிறார். பா.ஜ.கவின் இந்த சிக்கலை தீர்க்க பிராந்தியக் கட்சிகள் உதவலாம். ஆனால் மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் மோதல், பஞ்சாப் மாநிலத்தில் அகாலித் தல் கட்சியுடன் சுமூகமற்ற உறவு என மாநில கட்சிகளுடன் தற்போது பா.ஜ.க இணக்கமாக இல்லை.
உமர் பாரூக் கூறுகிறார், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிற அரசியல் கட்சிகளும் தெலுங்குதேசத்தை உதாரணமாக கொண்டு இனி மோதி அரசின் மீது அதிக அழுத்தங்களையும் கோரிக்கைகளையும் முன்வைக்கலாம். இனிமேல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒற்றுமையை தக்கவைத்துக் கொள்வதற்காக பா.ஜ.க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்."ராதிகா ராமசேஷன் கூறுகையில், "இது அடல் பிஹாரி வாஜ்பாயின் தே.ஜ.கூட்டணி இல்லை என்பது உண்மைதான், அப்போது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அவசியமானதாக இருந்தது. ஆனால் 2014ஆம் ஆண்டில் மோதி மற்றும் அமித் ஷாவின் முயற்சியால் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது. தற்போது அமித் ஷா கூட்டணியை வலுப்படுத்த விரும்பினாலும், கூட்டணிக் கட்சிகளின் விருப்பம் அதே அளவு தீவிரமாக இல்லை."
ராதிகா கூறுகிறார், "சிவசேனாவுடன் மோதி மற்றும் அமித்ஷாவின் உறவு மிகவும் மோசமாக இருந்தது, பஞ்சாப் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அகாலிகளுடனான உறவும் கானல் நீராகிவிட்டது. தமிழ்நாட்டில் கூட்டணிக்கான முயற்சிகளில் பா.ஜ.க ஈடுபட்டாலும், அங்கு அவர்களது அரசியல் திட்டம் என்ன என்பது தெரியவில்லை."
தற்போதைய நிலைமைக்கான இரண்டாவது காரணம் மாநிலங்களின் அழுத்தம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் என்று ராதிகா கருதுகிறார்.
ராதிகாவின் கருத்துப்படி, "மாநில அரசியலில் ஏற்படும் அழுத்தங்கள் சில சமயங்களில் நேர்மறையாக இருந்தால், பல சமயங்களில் எதிர்மறையாகவும் இருக்கும். உதாரணமாக, உத்தரபிரதேசம் மற்றும் பிகார் மாநில இடைத்தேர்தலின் முடிவுகள், 2014இல் இருந்த வலுவான நிலைமையில் பா.ஜ.க இல்லை என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பிராந்திய கட்சிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று அவை மோதி அரசின் மீது அழுத்தம் கொடுப்பது இயல்பானதே."< />தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் இன்னும் பல்வேறு அரசியல் நாடகங்கள் அரங்கேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய அரசியல் ரீதியிலான முடிவுக்கு நேரடி தாக்கம் இருக்குமா என்பதை சொல்வது கடினம். ஆனால், பா.ஜ.கவுடன் உறவு அவசியமா என்ற கேள்வியை பிராந்திய கட்சிகளின் மத்தியில் எழுப்பியிருக்கும்.
கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல்களில், இரண்டு மூன்று மாநிலங்களின் முடிவுகள் பா.ஜ.கவுக்கு சாதகமாக இருந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்."
மோதியின் அரசுக்கு 2019 ஆண்டு பொதுத் தேர்தல், 2014ஆம் ஆண்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று பத்திரிகையாளர் ராமச்சந்திரன் கூறுகிறார். "2019இல் எதிர்க்கட்சிகள் பெரிய கூட்டணியை அமைத்தால், வெற்றி என்பது மோதிக்கு எட்டிக்காயாகவோ எட்டாக்கனியாகவோ மாறலாம்".
"அண்மையில் உத்தரப்பிரதேசத்திலும், பிகாரிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்திய சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் உறவு பொதுத்தேர்தலிலும் தொடர்ந்தால், அந்த கட்சிகள் 50 இடங்களை வெல்ல முடியும், அதாவது இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு ஏற்படும் இழப்பை மற்ற மாநிலங்கள் (கிழக்கு வடக்கு மற்றும் தென் இந்தியா) ஈடுசெய்யும் என்ற சூழ்நிலை தற்போது இல்லை.">பா.ஜ.க வின் திட்டம் என்ன?< இந்திய அரசியலில் சிறப்பாக செயல்படும் சாணக்கியர்கள் என்று அறியப்படும் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் வடகிழக்கு மாநிலங்களில் சாதுர்யமான அரசியல் நகர்வுகளின் மூலம் வெற்றிக்கு வழிகோலினார்கள். இவர்கள் இருவரும் ஆந்திராவிலும் தங்கள் அரசியல் விவேகத்தை பயன்படுத்துவார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மூத்த பத்திரிகையாளர் உமர் ஃபரூக் கூறுகிறார், "சந்திரபாபு நாயுடு, மிகவும் திறமையானவர், எதிர்கால கண்ணோட்டத்தோடு செயல்படுபவர். பிராந்திய தலைவர்கள் யாரும் தனக்கு சரிசமமாக பேசுவது அமித் ஷாவுக்கு பிடிக்காது. இந்த நிலையில் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், ஆந்திர அரசியலில் கற்பனைக்கெட்டாத நிகழ்வுகள் நடக்கலாம்".
"ஜெகன் மோகன் ரெட்டியை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை அமித் ஷா மேற்கொள்வதற்கான சாத்தியங்களும் அதிகம். சந்திரபாபு நாயுடுவுக்கு அழுத்தம் கொடுப்பதைவிட, ஜெகன் மோகனுக்கு அழுத்தம் கொடுப்பதும் அவரிடம் அதிகாரம் செலுத்துவதும் அமித் ஷாவுக்கு சுலபமானது" என்கிறார் உமர்.
தெலுங்குதேசம் கட்சி விலகிய நிலையில் பாரதிய ஜனதா கட்சியிடம் அதற்கான மாற்றுத் திட்டம் கண்டிப்பாக இருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி.ஆர். ராமச்சந்திரன். "ஜெகன் மோகனுடன் பா.ஜ.க இணையலாம் என்ற ஊகமும் உண்மையாகலாம். ஏற்கனவே ஜெகன் மோகனுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் உடன்பாடு ஏறத்தாழ முடிந்துவிட்டதாகவே அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக, ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு மாநில தகுதி வழங்குவதாக கூறுவது ஆந்திராவுக்கான பா.ஜ.கவின் சிறப்பு திட்டமாக இருக்கலாம். அதோடு, இதையே காரணமாக தெரிவித்து, ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து மாநிலத்தில் தனது காலை வலுவாக ஊன்றுவதும் பா.ஜ.கவின் அரசியல் சாதுர்யமாக இருக்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக