siva. Oneindia Tamil
மும்பை: கார்த்தி சிதம்பரம் ரூ. 1.8 கோடி பணத்தை யாருக்கு கொடுத்தார் என்பது தெரிய வந்துள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த 28ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.< இந்நிலையில் கார்த்தி ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் சென்னை கிளையில் உள்ள தனது கணக்கில் இருந்து அதிகாரம் படைத்த அரசியல்வாதி ஒருவருக்கு ரூ. 1.8 கோடி பண பரிமாற்றம் செய்துள்ளது குறித்து அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது.
விசாரணையில் கார்த்தி தனது தந்தையின் வங்கி கணக்கிற்கு அந்த ரூ. 1.8 கோடி பணபரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பண பரிமாற்றத்திற்கும் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
வீடு கட்ட சிதம்பரம் ரூ. 2.8 கோடி பணம் கொடுத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு மூன்று காசோலைகளாக அந்த கடன் தொகை அளிக்கப்பட்டது.
கடன் வாங்கியதை திருப்பிக் கொடுக்கவே கார்த்தி அந்த பண பரிமாற்றம் செய்துள்ளார். 5 தவணைகளில் கடனை திருப்பிக் கொடுத்துள்ளார். இது தந்தை, மகன் இடையேயான ஏற்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் கார்த்தி சரியாக ஒத்துழைக்காததால் அவரின் காவலை நீட்டிக்க வேண்டியுள்ளது என்று சிபஐ வட்டாரங்கள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக