வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

Sex Chat லீக் ... பாகிஸ்தானுக்கு உளவுத்துறை இரகசியங்களை லீக் செய்த இந்திய விமானப்படை அதிகாரி

Siva  -
Oneindia Tamil டெல்லி: பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய ஆவணங்களை அளித்த இந்திய விமானப்படை அதிகாரி அருண் மார்வஹா கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார் அருண் மார்வஹா(51). பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ஆட்கள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் ஃபேஸ்புக்கில் 2 கணக்குகள் துவங்கி மாடல் அழகிகள் என்ற போர்வையில் அருணிடம் சாட் செய்துள்ளனர். IAF officer arrested in Delhi ஐஎஸ்ஐ ஆட்கள் 2 வாரமாக அருணிடம் ஃபேஸ்புக் மூலம் செக்ஸ் தொடர்பான சாட் செய்துள்ளனர். அவர்களை மாடல் அழகிகள் என்று நம்பி அருணும் கசமுசா சாட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அவர்கள் இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை அருணிடம் கேட்டுள்ளனர்.
அருண் ரகசிய ஆவணங்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதை கண்டுபிடித்த டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அருணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அருணை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அருணை லோதி காலனியில் உள்ள சிறப்பு பிரிவு போலீசாரின் தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக