திங்கள், 12 பிப்ரவரி, 2018

RSS மோகன் பகவத் : மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம்

மூன்றே நாளில், ராணுவம், தயார், செய்வோம், மோகன் பகவத் தினமலர் :பாட்னா: ராணுவம் ஆறு முதல் 7 மாதங்கள் வரையில் போருக்கு தயார் ஆகும் நிலையில், நாட்டிற்காக ஆர் எஸ் எஸ் அமைப்பு மூன்று நாளில் ராணுவத்தை தயார் செய்யும் திறனை கொண்டுள்ளது என அதன் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆறு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: நாடும், அரசியல்அமைப்பும் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் எங்கள் திறமை நாடு கடந்த நிலைக்கு முகம் கொடுக்கும். ராணுவம் ஆறு முதல் 7 மாதங்கள் வரையில் போருக்கு தயார் ஆகும் நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பு நாட்டிற்காக மூன்று நாளில் ராணுவத்தை தயார் செய்யும். இது நமது பலமாகும். இவ்வமைப்பு ஒரு ராணுவமோ அல்லாது துணை ராணுவமோ அல்ல. இது குடும்ப அமைப்பு போன்றது.இருப்பினும் ராணுவம் போன்ற பயிற்சி பெற்றது. நெருக்கடி காலங்களில் தொண்டர்கள் எப்போதும் தங்கள் நாட்டிற்காக தியாகம் செய்ய தயாராக உள்ளனர். என கூறினார்.


இது குறித்து மாநில எதிர்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் கூறுகையில் இந்திய ராணுவம் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளது. மோகன் பகவத்தின் அறிக்கை ராணுவத்தை குறை கூறுவதாக உள்ளது. தன்னுடைய கருத்தை உடனடியாக அவர் வாபஸ் பெற வேண்டும். என கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக