திங்கள், 12 பிப்ரவரி, 2018

தீபாவின் கணவர் கூறித்தான் வருமான வரி அதிகாரிகள் போன்று நடித்தோம்

தினகரன் :சென்னை : மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம் அளித்தார்.மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பிரபாகரன் வீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி அதிகாரி போல் மாதவன் நடிக்க சொன்னதாக பிரபாகரன் கூறியுள்ளார்.போலீசாரை பார்த்ததும் தீபா கணவர் மாதவன் என்னை தப்பியோடச் சொன்னதாக என்றும் அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10ம் தேதி திநகரில் ஜெயலலிதா தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பியோடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக