திங்கள், 19 பிப்ரவரி, 2018

கமல் + ரஜினி வருகையை கோபாலபுரம் விரும்பவில்லையாம் ... ரஜினி கமலிடம் கிசு கிசு ..

tamiloneindia :சென்னை: ஆன்மீக
அரசியலில் குதித்த போது தாம் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததை அவரது குடும்பத்தினர் எவருமே விரும்பவில்லை என கமல்ஹாசனிடம் குமுறியிருக்கிறார் ரஜினிகாந்த். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமது மதுரை அரசியல் கூட்டத்துக்கு வருமாறு ரஜினிகாந்தை கமல்ஹாசன் அழைத்தார். 
கமல்ஹாசனிடம் திமுக தலைவர் கருணாநிதியை இன்னமும் நீங்க சந்திக்கவில்லைதானே என ரஜினி கேட்டிருக்கிறார். 
இதற்கு பதிலளித்த கமல், சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன் என்றார்.  அப்போது, தாம் கருணாநிதியை சந்திக்க சென்றேன். அவரிடம் வாழ்த்து பெறத்தான் விரும்பினேன். ஆனால் கோபாலபுரம் இல்லத்தில் யாருக்குமே நான் அவரை சந்திப்பது பிடிக்கவில்லை.. நீங்கள் கவனமாக செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். 
 ரஜினிகாந்தின் இந்த அறிவுரைப்படிதான் கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மிக கவனமாகவே கமல் பேசினாராம். திராவிடம் என் கொள்கையில் இருக்கும் என்று கூறியதும் யாரையும் கலைக்க நான் அரசியலுக்கு வரவில்லை என பம்மியதும் ரஜினி கொடுத்த வார்னிங் அடிப்படையில்தானாம்.
விரைவில் வெளியே வரும் விரைவில் வெளியே வரும் என்னதான் ரஜினியோடு இணைந்து நான் பயணிக்கமாட்டேன் என கமல்ஹாசன் கூறி வந்தாலும் இருவரும் திரைமறைவில் ஒரே கோட்டில் பயணிப்பதாகவே கூறப்படுகிறது. காலம் வரும்போது பூனைக்குட்டிகள் வெளியே வரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக