வியாழன், 8 பிப்ரவரி, 2018

கதகளி கலைஞர் மேடையிலேயே உயிர் பிரிந்தது ... பத்மபூஷன் மடவூர் வாசுதேவன்.. கேரளா


மேடையில் நடனமாடும் போதே கதகளி கலைஞர் உயிர் பிரிந்தது 
தினத்தந்தி : கொல்லம்: கேரளாவின், பிரபல கதகளி கலைஞர், 'பத்ம பூஷண்' மடவூர் வாசுதேவன் நாயர், கோவில் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே, மாரடைப்பால் காலமானார்.கேரளாவைச் சேர்ந்தவர், பிரபல கதகளி கலைஞர், மடவூர் வாசுதேவன் நாயர், 88. இவர், செங்கனுார் ராமன் பிள்ளை என்பவரிடம், தன், 13வது வயதில் கதகளி கற்க துவங்கினார். இதன்பின், உலகம் முழுவதும், தன் நாட்டியத்தால் பிரபலம் அடைந்தார்.

பத்ம பூஷண் உட்பட, பல விருதுகளை பெற்றுள்ளார். கேரளாவின், கொல்லம் அருகே உள்ள, அகஸ்தியக்கூடம் மகாதேவன் கோவிலில், ராமாயண கதகளி நாட்டிய நாடகத்தை, நேற்றிரவு, இவர் நடத்திக் கொண்டிருந்தார். அதில் இவர், ராவணன் வேடம் போட்டிருந்தார். பக்தர்கள் திரளாகக் கூடி, நாட்டியத்தை ரசித்து கொண்டிருந்தனர்.அப்போது, மேடையில் ஆடிக் கொண்டிருந்த போது, வாசுதேவன் நாயர், திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.வாசுதேவன் நாயருக்கு, மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது மறைவுக்கு, கேரள முதல்வர், பினராயி விஜயன் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.சமீபத்தில், கேரளாவின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்ஞாலகுடா கோவிலில், ஓட்டந்துள்ளல் நாட்டியக் கலைஞர், கலாமண்டலம் கீதாநந்தன், மேடையில் நடன மாடிய போது, இதே போல மாரடைப்பால் உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக