செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

அப்பல்லோவில் ஜெயலலிதாவிடம் பேசினேன் .சமையல் அம்மா சாட்சியம் . அனுமதிக்கப்பட்ட மறுநாள் ..

அப்பல்லோவில் ஜெ. அனுமதிக்கப்பட்ட மறுநாள் அவரிடம் சமையலர் பேசியதாக தகவல் மாலைமலர்:  அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட மறுநாள் அவரை சந்தித்து பேசியதாக சமையலர் ராஜம்மாள் விசாரணை ஆணையத்தில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் உடல்நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் இன்று ஆஜரானார். விசாரணையின் போது, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் (செப்.23) ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்ததாக ராஜம்மாள் கூறியதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், அவரது மரணம் குறித்த விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக