செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஸ்டாலின் : கொள்ளையர்களுடன் போராடிய லாவண்யா போராடியது மெய் சிலிர்க்க ...



தினகரன் :கொள்ளையர்களுடன் ஐ.டி ஊழியர் லாவண்யா தைரியமாக போராடியது மெய் சிலிர்க்க வைத்தது: மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை: கொள்ளையர்களின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி.பெண் ஊழியர் லாவண்யாவை ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்னந்தனியாக கொள்ளையர்களுடன் அவர் தைரியமாக போராடியது என்னை மெய் சிலிர்க்க வைத்தது என்று கூறினார்.

 அதேபோல், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நேரில் சந்தித்து லாவண்யாவிற்கு ஆறுதல் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக