புதன், 21 பிப்ரவரி, 2018

திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்? கமலஹாசனின் கட்சியின் பெயர் ... சமுகவலை தளங்களில் ஓடுகிறது

mathi.tamiloneindia : சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமது கட்சிக்கு 'திராவிட
மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயரிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கமல்ஹாசன் இன்று முதல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். மதுரையில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொள்கைகள், கொடி ஆகியவற்றை அறிமுகம் செய்து வைக்கிறார்.
Kamal Party name Dravida Makkal Munnetra Kazhagam?
கமல்ஹாசன் தொடக்கம் முதலே தாம் திராவிடம் சார்ந்து செயல்படுவேன் என கூறி வருகிறார். தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் வரையில் என் கொள்கையிலும் திராவிடம் இருக்கும் எனவும் கூறியிருந்தார் கமல்ஹாசன். அதேபோல் திராவிட இயக்கத்தின் குறியீடான கருப்பு தமது நிறம் எனவும் கமல்ஹாசன் கூறிவருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் தமது கட்சிக்கு 'திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்' என பெயரிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக