புதன், 21 பிப்ரவரி, 2018

"மக்கள் நீதி மய்யம்" கமல் தொடங்கிய புது கட்சியின் பெயர்

மீண்டும் உங்களிடம் வருவேன் சொந்த ஊர் பரமக்குடியில் உருக்கமாக பேசிய கமல்

மதுரை : நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். மதுரை ஒத்தகடை மைதானத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார் நடிகர் கமல். சிவப்பு, வெள்ளை கைகள் இணைந்திருக்க நடுவில் கருப்பு நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது
தினத்தந்தி :மீண்டும் உங்களிடம் வருவேன் என சொந்த ஊர் பரமக்குடியில் உருக்கமாக கமல்ஹாசன் பேசினார்.
சென்னை; ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பின்னர், தனது பயணத்தை தொடர்ந்தார்.< மதுரை பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவர் மக்கள் மத்தியில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. கமல் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்படி பரமக்குடிக்கு இன்று அவரது வாகன அணிவகுப்பு வந்ததும். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கமலை உற்சாகமாக வரவேற்றனர். ஆனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி கமல் பேசவில்லை. வாகனத்தில் நின்றபடியே சிறிது நேரம் பேசினார்.


எவ்வளவு அன்பு இருந்தால் இந்த வெயிலிலும் உங்கள் ஊர் பையனை பார்க்கக் காத்திருப்பீர்கள். இதற்கு என்ன கை மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. மீண்டும் உங்களிடம் வருவேன். மதுரையில் நடக்கும் நிகழ்வுக்கு வரும் டெல்லி முதல்வரை வரவேற்க செல்வதால் உடனடியாக கிளம்பிச்செல்கிறேன். மீண்டும் உங்களிடம் பேசுவேன்," என்றார். 

மதுரையில் கமல் பொதுக்கூட்ட மைதானத்துக்குள் கடும் சோதனைக்கு பிறகே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்ட மைதானம் 4 புறமும் தடுப்பால் அடைக்கப்பட்டு இரு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருவாயில்களிலும் சோதனைக்கு பிறகே மைதானத்துக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிற

நடிகர் கமல் ஹாசனின் கட்சி அறிவிப்பு பொதுக்கூட்டம் மதுரையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர். #KamalsPoliticalEntry

மாலைமலர்: மதுரை:

கமல் ஹாசனின் கட்சி அறிவிப்பு பொதுக்கூட்டம் தொடங்கியது: மதுரையில் ஆதரவாளர்கள் திரண்டனர்நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கப்போவதாகவும், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார். அதன்படி இன்று ராமேஸ்வரம் சென்ற அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு கமலை உற்சாகமாக வரவேற்றனர். 

இரவு 7.15 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுரை ஒத்தக்கடை மைதானத்தை வந்தடைந்தார் கமல். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் வரவேற்று தனது காரில் அழைத்து வந்தார். அதன்பின்னர் பொதுக்கூட்டம் தொடங்கியது. 
இக்கூட்டத்தில் இயக்குனர்  ராசி அழகப்பன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிக்கும் கமல், தனது கட்சியின் கொள்கைகளையும் விளக்கி பேசுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக