புதன், 7 பிப்ரவரி, 2018

சந்தையூர் சுவர் ,,, ஜாதிய படி நிலையை பாதுகாக்கிறதா?

Kiruba Munusamy : சந்தையூரில் இருப்பது சுற்றுச் சுவரோ-தீண்டாமைச் சுவரோ, சுவர் தான் பிரச்சனை என்றால், ஜாதிய அடுக்குமுறையில் நமக்கும் கீழே தள்ளப்பட்டவர்கள் அதனை தீண்டாமையாக கருதுகிறார்கள் என்றால், அது சுற்றுச் சுவராகவே இருந்தாலும், அதனை இடிப்பதுவே நீதியாகும். ஒன்றை பாதுகாக்க நினைக்கிறோம் என்றாலே, அதன்மூலம் எதையோ கட்டிக்காக்க நினைக்கிறோம் என்றுதான் பொருள்!
ஜாதிய படிநிலையை எப்படி திருப்பி போட்டாலும் நமக்கும் கீழே ஒருவர் என்பதுவே பார்ப்பனியத்தின் அடிப்படை! ஆக, ஜாதியொழிப்பு என்பது நம்மிலிருந்து தொடங்கி, நம் கீழடுக்கை இல்லாமல் செய்து, மேலடுக்கை தகர்த்து சமத்துவத்தை பேணுவதாகும். எனவே, சமத்துவத்தை நோக்கிய படிக்கல்லாக சந்தையூர் சுவர் இடிப்பு மாறும் என நம்புகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக