சனி, 24 பிப்ரவரி, 2018

கமல் ! தன்னையே தலைவன் என்று தவிக்கிரானடி ,,, தன்னையே தானே கண்டு மயங்குறானடி ... சமுகவலை வறுவல்


Richy Bryson‎ t : கமல் எனும் நார்சிஸ்ட்
தன்னைத்தானே அளவுக்கு அதிகமாக காதலித்தல் தானே சிறந்தவன் என எண்ணுதல் தன்
மேலே ஆசை கொள்ளுதல் இதற்கு ஆங்கிலத்தில் நார்சிசம்(narcissism) எனும் பதம் உண்டு. நார்சிசம் எனும் பதத்திற்கு பின்னர் ஒரு கிரேக்க பழங்கதை உண்டு.கிரேக்கத்தின் வேட்டைக்கார இளைஞனான நார்சிசஸ் ஆற்றோரத்தில் அமர்ந்திரிக்கும் போது ஆற்று வெள்ளத்தில் விழுந்த தன் பிம்பத்தை பார்த்து அதன் மேல் மையல் கொள்கிறான்.அதன் பிறகு அவனால் பிறவற்றின் மேல் கவனம் கொள்ள இயலவில்லை.உருகி உருகி தன்னைத்தானே காதலித்து செத்துபோகிறான்.இந்த நார்சிசஸின் கதையிலிருந்து வந்த பதமே நார்சிசம் தன்னைத்தானே சுய ஆராதனை செய்து கொள்ளுபவர்களுக்கு இடப்படும் பெயர்தான் நார்சிஸ்ட்.இது ஒருவித ஆட்கொல்லி மனநோய்.........
நார்சிஸ்ட் களின் இயல்புகளானது
1. தன்னைத்தானே எல்லா விடயங்களிலும் முன்நிறுத்தி கொள்ள நினைப்பது அல்லது தான் தான் எனும் பிம்பத்தை தன்க்குள்ளே கட்டி எழுப்புவது.....
2.தான் சார்ந்த சமூகத்தில் தான் ஒரு மிக முக்கியமானவனாக தன்னை முன்நிறுத்து கொள்ள முயல்வது.....
3.எல்லா விடயங்களிலும் தான் தேர்ந்தவன் என்று காட்டிக்கொள்வது........
4.அளவுக்கதிகமான தற்பெருமையில் உழல்வது.தன் சாதனைகளை தானே ஊதிப்பெரிதாக்குவது........

5.தனக்கு நேரும் சிற்சில அவமதிப்புகளையும் அல்லது தானே தனக்கு அவமதிப்பு நேர்ந்ததாக நினைத்து கொண்டு கடுமையான எதிர்வினையாற்றுவது......
6.தன் நடத்தை தன் பேச்சு தன் உடல்மொழி என எல்லாவற்றிலும் ஒருவித மேதாவித்தனத்தை காட்டுவது.......
7.தன்னை பின்பற்றுபவர்களையோ அல்லது தன்னை அங்கிகரிப்பவர்களையோ அளவுக்கு அதிகமாக புகழ்தல்.......
8.சுயதேவைகளுக்காக பிறரையோ அல்லது ஒரு சமூகத்தயோ பயன்படுத்திகொள்வது.........
9.தன்மீதுள்ள அளவுகடந்த காதலால் பிறருடனோ அல்லது இணையுடனோ உறவுச்சிக்கலில் இருப்பது அல்லது உறவுகளை பேனும் திறன் இல்லாமல் போவது..........
10.உளவியல் ரீதியான ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பது அதனாலேயே தான் செய்வதுதான் சரி என தன்னையும் பிறரயும் நம்ப வைப்பது...........
கமலை நார்சிஸ்ட் என சொல்வதற்கான காரணம் புரிகிறதா மேல் சொன்ன அனைத்த குணநலன்களிலும் ஒத்து போவபவர்தான் இந்த ஆண்டவர். என்ன சந்தேகமாக இருக்கிறதா அவரது சமீபகால டிவிட் களை படியுங்கள் அவர் இயக்கிய அல்லது கதை எழுதியதாக சொல்லிக்கொள்ளும் திரைப்படங்களயும் அது வெளிவரும்போது அவர்கொடுக்கும் பேட்டிகளயும் அந்த சமயங்களில் அவர் பங்குகொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளயும் காணுங்கள்..........
ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை கமல் பயன்படுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையை எடுத்து பாருங்கள். கமல் சில நேரங்களில் முட்டாள் தனமான கருத்துகளையும் மேதாவித்தனமான் உடல்மொழியிடன் வெளியிடுவதை பாருங்கள். கமல் இதுவரை பங்கு பெற்ற பிறமொழி தொலைக்காட்சி கானொளிகளை இனையத்தில் தேடிப்பாருங்கள் நூறுசதவீதம் கமல் ஒரு நார்சிஸ்ட் என ஒத்துக்கொள்வீர்கள்.............
இந்த இதேபோன்ற குணநலன்களை கொண்ட மற்றொருவரும் இருந்தார் மிக அரக்கத்தனமான ஆட்சியை தமிழகத்திற்கு தந்து மர்மமான முறையில் கடற்கரையில் நிரந்தர துயில்கொண்டு இருக்கிறார் அவர் பங்குக்கு சில அடிமைகளை இந்த மன்னில் உலவ்விட்டு சென்றிருக்கிறார்........
இன்று ஆண்டவர் ஆண்டவர் என்று கூவும் சுயசிந்தனை அற்ற அறிவீலிகளை காணும்போது இந்த அடிமைகள் தான் கண் முன்வந்து செல்கிறார்கள்.இந்த ஆண்டவருக்கும் அம்மையாருக்கும் நார்சிஸ குணநலன்களை தவிர்த்து பார்த்தால் அந்த அம்மா கொஞ்சம் அறிவுத்திறன் கொண்டவர்..............
ஆண்டவரும் அறிவாளி என்கிறீர்களா.....? மேதாவித்தனம் வேறு அறிவாளித்தனம் வேறு புரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே..........
நன்றி
ரிச்சி பிறைசன்
அவசியமான 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக