ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

சீமான் + சரத்குமார் கூட்டணி ?

Ravi Raj : சீமான் சரத்குமார் இணைந்து செயல்பட முடிவு : செய்தி
ஆக அங்கிள் சைமன் கூட்டணிக்கு தயாராகின்றார் என்பது புரிகின்றது. இவ்வளவு நாளும் கூட்டணி கிடையாது, புலி வேட்டைக்கு போகும் பொழுது தனியாகவே செல்லும், நாய்தான் கூட்டமாக செல்லும் என்றெல்லாம் பேசிகொண்டிருந்தவர் சைமன்
ஆக புலி நாயாகி கொண்டிருக்கின்றதா? அல்லது புலிவேடமிட்ட நாய் வேடத்தை கலைக்கின்றதா என்பதை தமிழகமே முடிவு செய்யட்டும்
எந்த கொள்கை அடிப்படையில் இருவரும் கூட்டணி ஆனார்கள், தேடுவாரற்று போன தார்மீக அடிப்படையாக இருக்கலாம் என்றாலும் இருவருக்கும் இடையே ரகசிய இழை ஒன்றும் ஓடுவதும் கூடுதல் காரணம்
என்ன இழை?
இருவரின் மனைவியருமே தெலுங்கு வம்சாவழி என்பதுதான் விஷயம், ஆக இனி தெலுங்கு பெண்ணை திருமணம் செய்த யாரும் இந்த கூட்டணியில் இணைய பிரகாசமான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

கூட்டணியின் கோஷம் இனி "நாம் தமிழர் நம் மனைவியர் தெலுங்கர்" என நிச்சயம் மாறும்
இப்பொழுது மிக இக்கட்டான நிலையில் இருக்கும் கட்சி எது தெரியுமா? தமிழக பாஜக‌
ஆம், கட்சியில் இணைந்து அரைமணி நேரம் கூட தக்கவைக்க முடியாத சரத்குமாரை சைமன் அசால்ட்டாக தூக்கி சென்றுவிட்டது இந்நாட்டின் ஆளும் கட்சிக்கு எவ்வளவு பெரும் அவமானம்?
எப்படியோ கச்சதீவினை பிடிப்பேன் என கிளம்பிய சைமன் சரத்குமாரை பிடித்துவிட்டார், இனி சரத்குமாருக்கு கச்சதீவு என பெயர் மாற்றிவிட்டால் போதாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக