ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

தமிழுக்கு நஞ்சு பூசிய நாகசாமிக்கு பத்ம பூஷன் பட்டம் ....


இந்திய அரசால் “பத்ம” விருதளிக்கப் பட்டுள்ள தொல்லியலாரும் பார்ப்பனரு மான இரா.நாகசாமி, தன் ‘த மிரர் ஆப் த சான்ஸ்கிரிட்’ (The Mirror of Tamil and Sanskrit) என்னும் நூலில் முன்வைத் துள்ள முடிவுரைகள்.
1. தமிழ் தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை. சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிடமிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகிறது.
2. தொல்காப்பியம் இலக்கண நூலன்று; பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட நடனப் பாடல்களுக்கான கருத்தமைந்த தொகுப்பு அது.
3. சிலப்பதிகாரம் வரலாற்றுக் காப்பிய மன்று; பல்வேறு காலகட்டத்தில் சொல் வழக்கில் இருந்த நாட்டியப் பாடல்களின் தொகுப்பு.
4. தமிழ் எழுத்துகள் பிராமி என்ற கல் வெட்டு எழுத்துகளைப் பார்த்து வடி வமைக்கப்பட்டன.
5. தமிழர் இலக்கியங்கள் பரத முனிவ ரின் ‘யமகம்’ என்ற அடிப்படை இலக்க ணத்தைக் கொண்டே வளர்ந்துள்ளன.
6. தமிழர்கள் வேதக் கடவுளர்க ளையே வணங்குகின்றனர்.
7. தமிழர்க்கெனத் தனி வாழ்வுநெறி இல்லை. வடமொழி, வேதநெறி மரபு வாழ்வையே பின்பற்றி வாழ்கின்றனர்.

8. தமிழரின் கலை, இசை, நடனம், இலக்கியம், எல்லாம் கடன் பெற்ற வையே.
9. காலந்தோறும் தமிழ் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிலிருந்தே கடன் பெற்று வளர்ந்துள்ளது. அதி லுள்ள அய்ந்நிலம் என்பது உண்மை யான நிலப்பாகுபாடன்று. அது நாடகத் தின் சுவையை மிகுவிக்கப் போடும் பின் னணித்திரை போன்றது. தமிழ் அகம், புறம் பற்றிய பாடல்கள் அனைத் துமே நாட்டியமாடப் பின்னணியாகப் பாட எழுதப்பட்ட பாடல்களைப் போன்றனவே ஆகும். எதுவும் உண் மையான வாழ்வு நெறியினின்று கிளைத்தது அன்று.
10. பொதுவாக நாம் இன்று சிறப்புடன் போற்றும் தமிழ்சார்ந்த அனைத்துமே கற்பனைகளே. இவற்றை உணமை என நம்பித் தமிழ் உயர்வு பற்றிப் புகழ்தல் எல்லாம் தவறு.
நன்றி: மூதறிஞர் தமிழண்ணல் எழுதி, திரு இராமசாமி நினைவுப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பேராயம் வெளியிட்ட, ‘தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண் ணாடியும் பார்வைக் கோளாறுகளும்’ என்னும் நூலுக்கு முனைவர் மு.பொன் னவைக்கோ எழுதிய அணிந்துரை.
இப்போது புரிகிறதா? நாகசாமிக்கு அளிக்கப்பட்ட பத்ம பூசண் விருது தமிழுக்கும் தமிழினத்துக்கும் எதிராக விதைக்கப்பட்ட பார்ப்பனிய நச்சுக் கருத்துகளுக்காக என்பது புரிகிறதா? பாஜக தமிழுக்கு எதிரான அமைப்பே என்பதைத் தமிழ்நாடு உணருமா?
(விடுதலை ஞாயிறு மலர்: 3.2.2018)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக