வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

மணல் இறக்குமதியை தடுக்கும் மணல் மாபியா / அரசாணை! இறக்குமதியை தடுப்பது அரசமைப்புக்கு விரோதம் ! உயர்நீதிமன்றத்தில் வாதம்

நக்கீரன் :தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறைக்கு  மட்டுமே விற்கவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
;வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறை தான் விற்பனை செய்யும் எனவும், சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது என கட்டுப்பாடுகள் விதித்து கடந்த டிசம்பர் 8ம் தேதி பொதுப்பணித்துறை அரசாணை பிறப்பித்தது.
;மணல் விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர் உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாக இருக்கிறது என்ற நோக்கில் பொதுநல வழக்காக சென்னையை சேர்ந்த ஆதிமூலம்  பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.;
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மணல் இறக்குமதியை தடுக்கும் நோக்கத்துடன் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனவும், மணல் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதிக்காத நிலையில், மாநில அரசு அரசாணையின் மூலம் தடை விதிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
;இதனயடுத்து மனு மீதான விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.< ஜீவாபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக