புதன், 28 பிப்ரவரி, 2018

ஸ்ரீதேவி மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்!

மின்னம்பலம் :இராம்  : இந்திய சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்பட நடிகையாக தன் நடிப்பால் முத்திரை பதித்து வெற்றி வாகைசூடியவர் ஸ்ரீதேவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் திரைப் பயணத்தைத் தொடர்ந்த ஸ்ரீதேவி, இந்திப் பட ரசிகர்களால் கனவுக்கன்னியாக, சூப்பர் ஸ்டாராக ஆராதிக்கப்பட்டார்.
தமிழகத்திலிருந்து இந்தித் திரையுலகில் ஹேமமாலினி, ரேகா, வைஜயந்திமாலா ஆகியோர் முன்னணி நடிகைகளாகப்பயணப்பட்டிருந்தாலும் ஸ்ரீதேவி அளவுக்கு இந்தியில் பிற தமிழ் நடிகைகள் உச்சத்தைத் தொட்டதில்லை.
அதை போன்றே அவரது மரணத்தைப் பற்றி முதலில் வந்த செய்தியும் பின்னர் அது மறுக்கப்பட்டு அவர் மாரடைப்பில்இறக்கவில்லை, குளியல் தொட்டியில் மூழ்கி மூச்சுத் திணறி மரணமடைந்தார் என்ற செய்தியும் ஊடகங்களில்உச்சத்தைத் தொட்டன.
அத்துடன் இல்லாமல் குளியல் அறையில் எப்படி விழுந்திருப்பார் என்னும் யூகங்களை வைத்து, தொலைக்காட்சிகள் தங்கள் வியாபாரத்துக்காக ஸ்ரீதேவியின் மரணச் செய்தியைப் பயன்படுத்தி உச்சத்தைத் தொட்டது.
வருமானத்துக்கான தேடல்…

ஸ்ரீதேவி தொழில்முறை நடிகை. அதில் அவர் தனித்தன்மையுடன் திகழ்ந்தார். கதாநாயகியாக நடிப்பதை ஸ்ரீதேவிநிறுத்திக்கொண்டாலும் சினிமாவால் கிடைத்த புகழை வைத்து விளம்பரப் படங்களில் நடிப்பது, தனியார் விழாக்களில்விருந்தினராகப் பங்கேற்று சம்பாதிப்பது ஆகியவற்றை ஸ்ரீதேவி நிறுத்தவில்லை. தமிழில் விஜய் நாயகனாக நடித்த புலிபடத்தில் ஸ்ரீதேவி நடித்ததற்கு சம்பள பாக்கி இருந்தது. அதை ரிலீஸுக்கு முன் வசூலிப்பதில் கறாராக இருந்தார் என்பதுதமிழ் சினிமா பிரமுகர்கள் அறிந்த ஒன்று.
ஸ்ரீதேவி அண்மைக்காலங்களில் திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் தன் இளமைத் தோற்றம்குன்றாதவண்ணம் அழகுபடுத்திக்கொள்வது, அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வது ஆகியவற்றில் ஸ்ரீதேவிஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார். அதேபோல் தன் மூத்த மகள் ஜான்வியை இந்தியில் கதாநாயகியாக்கும் முயற்சியில்வெற்றி பெற்றார்.
மன உளைச்சலுக்கான காரணம் என்ன?

ஒருபுறம் இது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மகள் ஜான்வியின் ஆண் நண்பர்கள் வட்டத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார்ஸ்ரீதேவி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஜான்விக்குத் தந்தை போன்றவர். அவரதுமகனுடன் தன் மகள் நெருக்கமான நட்புடன் இருப்பதை ஸ்ரீதேவியால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவே அவரை நிரந்தரமன உளைச்சலைத் தந்தது என்கின்றனர்.
ஸ்ரீதேவியின் தினசரி பராமரிப்புச் செலவு ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் என்கின்றனர். இந்தச் செலவைச்சமாளிப்பதற்காகவே தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஸ்ரீதேவி ஆர்வம்காட்டி வந்தார் என்றுசொல்லப்படுகிறது.
அந்த அடிப்படையில், போனி கபூர் உறவினர் திருமணம் என்றாலும் அதில் கலந்துகொள்ள 50 லட்சம் கட்டணம் பேசி 30 லட்சம் ரூபாய் அட்வான்ஸாகப் பெற்றாராம் ஸ்ரீதேவி. எஞ்சிய தொகையைத் திருமணம் முடிந்தவுடன் தருவதாகக்கூறியவர்கள், திருமணம் முடிந்து மறுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தருவதாகக் கூறிவிட்டனர். இதனால்திருமணம் முடிந்து மகளுடன் நாடு திரும்பிய கணவர் போனி கபூருடன் போகாமல் துபாயில் ஸ்ரீதேவி தனியாகத் தங்கநேரிட்டது என்கிறார்கள்.
ஏற்கெனவே மகள் நடவடிக்கையால் மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீதேவி கவலையை மறக்க மதுவுக்கு அடிமையாகிஇருந்திருக்கிறார்.
விடை தெரியாத கேள்விகள்

மனைவியைத் தனிமையில் விட்டுவிட்டு மூன்றரை மணி நேரத்தில் ஒரே விமானத்தில் மும்பைக்கு மகளுடன் வந்தபோனி கபூர் மீண்டும் துபாய்க்கு வர வேண்டிய அவசியம் என்ன? மகளை மட்டும் உறவினர்களுடன் அனுப்பிவிட்டுமனைவியுடன் இருந்திருக்கலாமே? செய்தி ஊடகங்களுக்கு மாரடைப்பால் காலமானார் என்னும் செய்தியைக்கசியவிட்டது ஏன்?
இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. மது போதையால் மயங்கிக் குளியல் தொட்டிக்குள் மூழ்கி மூர்ச்சையாகிமரணமடைந்தார் எனக் காவல் துறை அறிவித்திருக்கிறது. இந்திய அரசாங்கம் தனது தூதரகத்தின் மூலம் பெரும் அழுத்தம்கொடுத்தும் துபாய் அரசு தனது சட்ட நெறிமுறைகளை விட்டுக்கொடுக்காமல் தேவையான விசாரணைகளை முடித்த பின்ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைத்திருக்கிறது.
நேற்று வரை அப்பழுக்கற்ற, புகழ் பெற்ற நடிகையாக ஊடகங்கள் 24 மணி நேரமும் ஸ்ரீதேவியின் புகழ் பாடின. அதை மக்கள்மறப்பதற்குள் குடிபோதையில் மரணம் என்பதை மெதுவாகச் சொல்லியிருக்கின்றன ஊடகங்கள்.
புகழ் பெற்றவர்களின் அகால மரணங்களில் விடை தெரியாத, விடை காண முடியாத கேள்விகளும் மர்மங்களும் கொட்டிக்கிடக்கும். அது நாடு கடந்து சென்ற ஸ்ரீதேவி மரணத்திலும் நீடிக்கிறது.
மூன்று முடிச்சு படத்தில் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவியின் மரணம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாக இருப்பதை அவிழ்க்கப்போவது துபாய் அரசாங்கமா? போனி கபூரா? முகம் தெரியாத ஹோட்டல் ஊழியர்களா? காலம் கருணை காட்டுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக