வியாழன், 22 பிப்ரவரி, 2018

நான்கு மாணவிகள் தற்கொலை முயற்சி ... ஆசிரியர் திட்டியதால் ,, மதுரை

மின்னம்பலம் : மதுரை, திருமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் நான்கு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தில் PKN பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் நான்கு மாணவிகள் வகுப்பில் சரியாக படிப்பதில்லை என்றும், அதனால் ஆசிரியர் அவர்களைக் கடுமையாகத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த அந்த மாணவிகள் நால்வரும் எலி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை நடைபெற்றுவருகிறது.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை
மேற்கொண்டுவருகின்றனர்.மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் குற்ற சாட்டுகளை வைத்தனர். மாணவிகள் எலி மருந்தைக் குடித்ததும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல்,எங்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதையடுத்து, மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் வேலூரில் ஆசிரியர் திட்டியதற்காக பதினோராம் வகுப்பு படிக்கும் தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி ஆகியோர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக