ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அருண் ஜெட்லி : விஜய மல்லையா மோசடி குறித்த ஆவணங்களை காணவில்லை! ... பாரத் ரத்னா மல்லையா வாழ்க!

Swathi K விஜய் மல்லையா மோசடி செய்ததற்கான எந்த ஆவணமும் இல்லை என அருண் ஜெட்லி சொல்லியிருக்கின்றார், இது எந்த அளவு விவகாரம் ஆகும் என தெரியவில்லை. (ஆவணம் இல்லை என்றால் ஏன் வழக்கு தொடரவேண்டும்? அவரை விரட்ட வேண்டும்?. அரசிடம் ஆவணங்கள் இல்லை என்றால் வங்கிகளிடமுமா இல்லாமலிருக்கும்?) முன்பு விஜய்மல்லையா தங்களுக்கு தெரியாமல் தப்பினார் என்றார்கள், இப்பொழுது ஆவணமே இல்லை என்கின்றார்கள். போகிற போக்கை பார்த்தால் விஜய் மல்லையா பல நூறு கோடி நஷ்ட ஈடு கேட்பார் போலிருக்க்கின்றது. இதுபற்றி மோடியிடம் கேட்டால், சாவர்க்கர் இந்து இந்தியா அமைப்பதை நேரு தடுத்தார், காந்தி தற்கொலை செய்திருந்தால் கோட்சே கொலைகாரனாக ஆகியிருக்க மாட்டான், வீர சிவாஜி இருந்தால் ஜின்னா அடங்கி இருந்திருப்பார் என சம்பந்தமில்லாமல் பேசிகொண்டிருப்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக