ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத இருக்கை; செத்தமொழிக்கு சிம்மாசனமா? - கீ.விரமணி கண்டனம்

நக்கீரன் :சென்னை ஐ.ஐ.டி.யில் செம்மொழியான தமிழ் மொழியைப் புறந்தள்ளி, செத்த மொழிக்கு சிம்மாசனமா? நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி வெடிப்பது உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,>இந்தியா - பன்மதம், பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் என்ற பண்பாடுகள் நிறைந்த ஒரு நாடு. அதனால்தான் இதை ஒரு மதச்சார்பு நாடாக அமைக்காமல், அரசியல் சட்ட கர்த்தாக்கள் மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசு ஆட்சியாகவே அமைத்தனர்.இது அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமைகள் உள்பட) அடிப்படைக் கட்டுமானம்; எளிதில் மாற்ற முடியாதது; மாற்றக் கூடாததும் ஆகும்.  (Basic Structure of the Constitution).
;எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன்மீது பதவிப் பிரமாணம் எடுக்கின்றனர்.

உலக நாடுகள் பலவற்றிலும் பேசப்படும் - எழுதப்படும் மொழி செம்மொழியான தமிழ் மொழி! நமது அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் (பிரிவுகள் 344(1), 351 ஆகியவற்றின்படி) இடம்பெற்றுள்ள மொழிகள் இதில் எதுவும் தேசிய மொழி என்ற தனித்தகுதி பெற்று பிரகடனப்படுத்தாமல், பொதுவில் மொழிகள் - (Languages என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்) மொத்தம் 22 ஆகும்.
;இந்த 22 மொழிகளில் அகர வரிசையில் சமஸ்கிருதம் 17 ஆவது இடத்தில் உள்ளது.;

இந்த 22 மொழிகளில் உலக நாடுகள் பலவற்றிலும் பேசும் - எழுதப்படும் மொழி - உயிர்ப்புள்ள செம்மொழியான தமிழ் மொழியேயாகும். ஐரோப்பாவின் பற்பல நாடுகள், கனடா பகுதிகளில், ஆஸ்திரேலியாவில், ஆப்பிரிக்காவில், ஆசியா கண்டத்திலும், சிங்கப்பூர், மலேசியா, மியான்மா (பர்மா) போன்ற பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் பேசும் மொழி - சுமார் 8 கோடி பேர்களுக்குமேல் பேசும் மொழி - வளமான செம்மொழியாகும்!

வெகு, வெகு, குறைந்த எண்ணிக்கையில் உள்ளோர் இந்த அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் வெகுக்குறைந்த எண்ணிக்கையில் உள்ளோர் பேசும், எழுதும் மொழி சமஸ்கிருதம்தான்! சில புள்ளி விவரங்கள்படி 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவில்  சமஸ்கிருதம் பேசுவோர் சில நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரங்களில்தான்!

பண்பாட்டுப் படையெடுப்பைப் புதுப்புது கோணங்களில் - புதுப்புது உத்திகளைக் கையாண்டு,>அந்த செத்த மொழி என்று பல காலம் பல மொழி வல்லுநர்களால் வர்ணிக்கப்பட்ட மொழியை மற்ற மொழிக்கெல்லாம் இல்லாத பெருமையாக தேவ பாஷை என்று ஏற்றி வைத்து, ஆரியப் பார்ப்பனர்களும், அவர்தம் அடிவருடிகளும் இன்றளவும் கூறி, தமது பண்பாட்டுப் படையெடுப்பைப் புதுப்புது கோணங்களில் - புதுப்புது உத்திகளைக் கையாண்டு சிங்காரித்து உள்ளனர்.

சமஸ்கிருதம் என்பதே நன்றாக சமைக்கப்பட்டது என்று பொருள் பெற்றது. பிராகிருத மொழிக்கு, பாலி மொழிக்குப் பிறகே ஏற்பட்ட ஒன்று - அது கடவுள் பேசிய மொழி மற்ற தமிழ் போன்றவை நீஷ பாஷை மொழிகள் என்று அவதூறு பரப்பப்பட்டது! பார்ப்பனக் கலாச்சார ஆரிய நாடாக - ஹிந்து நாடாகவே ஆக்கிடும் திட்டமுள்ள ஆர்.எஸ்.எஸ். - பாஜ.க. ஆட்சி, நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் சமஸ்கிருத கலாச்சாரத்தையே பரப்பிடும் வேலையில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் செய்து வருகின்றது!<">சமஸ்கிருத மொழியின்  குட்டு வெளிப்பட்டது!

செம்மொழி (Classical Language) என்ற தகுதியே அதிகாரப்பூர்வமாக அதற்கு இல்லாமலேயே - இருந்ததாக வாய்மொழிப் பிரச்சாரத்திலேயே பரப்பி வந்த குட்டு, நமது தி.மு.க. தலைவர் கலைஞர் மத்திய அரசில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்று தர முனைந்தபோதுதான் வெளிப்பட்டது! நெல்லுக்கிறைத்த நீர், வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் பொசிந்த கதைபோல, அதனால் சமஸ்கிருதமும் இந்திய அரசின் ஆணைப்படி தகுதிபெற்றது தமிழையொட்டி!

;இந்நிலையில், ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத இருக்கையை ஏற்படுத்த, சாமியார் சந்த் ரிஜிந்தர் சிங்ஜி மகராஜ் (கற்பழிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு, ஜெயிலுக்குச் சென்ற காவிச் சாமியார் ராம்ரகீம் பாபா போன்று மகராஜ் பட்டத்தையே சூட்டி பவனி வருவார்கள்) என்பவர் தனி இருக்கை அமைக்க (90 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறாராம்) - சமஸ்கிருதத்தில், வேதத்தில் உள்ள விஞ்ஞானத்தை அலசி ஆராய இருக்கை அமைத்து - பிஎச்.டி., முனைவர் பட்டத்திற்கு உதவித் தொகை வழங்கப் போகிறார்கள்.

;Department of Humanities and Social Sciences நேற்றிரவு இச்செய்தி வெளிவந்துள்ளது. இந்த சமஸ்கிருத இருக்கை Department of Humanities and Social Sciences என்பதுடன் இணைக்கப்பட்டு, வேத காலங்களில் உள்ள இந்திய பாரம்பரியத்தில் சமஸ்கிருத மொழியை முன்னிலைப்படுத்தியதாம்!

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக...";சமஸ்கிருதம் வருமுன்னர் பிராகிருத மொழிதானே இருந்தது. பிறகுதானே கூட்டுக் கலவையாக சமஸ்கிருதம் (நன்றாக சமைக்கப்பட்ட மொழியாயிற்றே!). இதை மறைத்துவிட்டு, ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக ஆரிய மொழி ஆதிக்கத் திணிப்பை மறைமுகமாக இப்படி நடத்துவதா? அரசு பணத்தில் நடத்தும் இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி பெற்ற ஐ.ஐ.டி. (வெளிநாட்டு உதவி - உள்நாட்டு அனைத்து மக்கள் வரிப்பணத்தைப் பெற்று நடப்பதில்) இப்படி ஒரு ஆரிய ஆதிக்க ஊடுருவலை திட்டமிட்டே செய்கின்றனர்.


;இதற்குத்தான் ராஜீவ் மல்ஹோத்திரா என்ற ஒரு பச்சை ஜாதி வெறியர், சமஸ்கிருத மொழி வெறியர் சில வாரங்களுக்கு முன் வந்து ஏற்பாடுகள் செய்துள்ளார். திராவிட, தமிழ் இன மொழி உணர்வாளர்கள் கட்சி, ஜாதி, மத, பேதமின்றி எதிர்த்தாக வேண்டும்! இதனை தமிழ்நாட்டு மொழி உணர்வாளர்கள் - திராவிட உணர்வாளர்கள் கட்சி, ஜாதி, மத, பேதமின்றி எதிர்த்தாகவேண்டும்.

முதலில் செம்மொழி தமிழுக்கு அரசே முன்வந்து இருக்கை அமைக்கட்டும்! 22 மொழிகளில் எங்கெங்கு ஐ.ஐ.டி.,க்கள் உள்ளனவோ அங்கங்கு அந்தந்த மொழி இருக்கைகளை ஏற்படுத்தி, அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம அந்தஸ்து வழங்க முன்வரவேண்டும்.

;தமிழ்நாட்டில் நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது உறுதி! ஏதோ ஒருவர் ஏற்பாடு செய்தார் என்று கூறி, ஐ.ஐ.டி., இயக்குநரான பார்ப்பனர் பட்டும் படாமலேயே - தனக்கு இதுபற்றி அதிகம் தெரியாததுபோல,  கேட்டவர்களிடம் பதில் கூறியிருப்பது நமது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது உறுதி.

செம்மொழியான தமிழ்மொழியைப் புறந்தள்ளி, செத்தமொழிக்கு சிம்மாசனம் அளிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக