புதன், 7 பிப்ரவரி, 2018

இந்திய காமம் இருக்க விதேசி காதல் எதுக்கடா முட்டாள்களா ? காதலர் தின சிந்தனைகள்

Shalin Maria Lawrence :ஒழிக காதலர் தினம்.
ஹிந்து மக்கள் கட்சி சொல்லுவதில் நியாயம் இருக்கிறது .நான் அவர்களை ஆதரிக்கிறேன் .
நாம் ஏன் வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரியார் வாலன்டைனின் நினைவு நாளான வாலன்டைன்ஸ் டேவை (காதலர் தினம்) கொண்டாட வேண்டும் .
தேசியமும் தெய்வீகமும் இருக்கண்களாக இருக்கும் நாம் நம் முப்பாட்டன் வாத்சாயனர் வழி காமத்தை அல்லவா கொண்டாட வேண்டும்.
ரிஷி வாத்சாயனர் நினைவாக நாம் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தில் காம திருநாள் கொண்டாட வேண்டும் .
காமரசத்தை சிலைகள் வடிவாக உருவகப்படுத்தி பொழியும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் அன்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
கோயில்களில் சிறப்பு பிரசாதமாக முருங்கை அல்வா வழங்கப்பட வேண்டும்.தாக சாந்திக்கு மன்மத தெய்வத்தின் கரும்பு ஜூஸ்.
பல பெண்களோடு சஞ்சரித்த இந்திரனை மனதில் நினைத்துக்கொண்டு இளைஞர்கள் அன்று முழுவதும் காம களியாட்டத்தில் திளைக்க வேண்டும்.

ஜோடி இல்லாத பெண்கள் நாச்சியார் திருமொழி வாங்கி படிக்கலாம்.
காமசாஸ்திரத்தில் உள்ளது போல ஒரு ஆண் பல பெண்களுடனும் ,ஒரு பெண் பல ஆண்களுடனும் சல்லாபிக்கலாம்.
ஆண்களும் பெண்களும் திரண்டு ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்து முப்பாட்டன் வாத்சயனருக்கு வீர வணக்கம் செலுத்தலாம் .
விருப்பமில்லை என்றாலும் தனக்கு பிடித்த பெண்ணின் கழுத்தில் கட்டாய தாலியை கட்டி நம் சாஸ்திர முறைப்படி கட்டாய மனைவியாக்கி கொள்ளலாம்.
முடிந்ததால் போராட்டகாரர்கள் கஜுராஹோ கோயில்களில் உள்ளது போல மனிதர் மிருங்கங்களோடு சேர்ந்து செய்யும் சாகசங்களை பற்றி கொள்கை பரப்பு செய்யலாம்.
இவ்வளவு சுவாரசியங்கள் நம் மண்ணில் புதைந்த கிடைக்க நாம் ஏன் இந்த காதல் கத்திரிக்காய் என்று சிந்திக்க வேண்டும்?
இந்திய காமம் இருக்க விதேசி காதல் எதுக்கடா முட்டாள்களா ?
ஜெய் ஹிந்த் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக