ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

ஆந்திராவின் ஒண்டிமிட்டா வனப்பகுதி ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு

ஆந்திராவின் ஒண்டிமிட்டா வனப்பகுதி ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் மீட்புமாலைமலர் :ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டு உள்ளது. கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை சிறைபிடித்து வைத்து வருகின்றனர்.< இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், செம்மரம் வெட்ட வந்த அவர்களை போலீசார் துரத்திய போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது.  எனவே, அவர்களின் உடலை கைப்பற்றியுள்ளனர். ஏரியில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் செம்மரம் வெட்ட வந்தவர்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் கடப்பா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக