ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

அரசியல்வாதிகளில் 67% கிரிமினல்ஸ் பிஜேபியில் தான் இருக்காங்கனு ரிப்போர்ட்

சுவாதி திருநெல்வேலி : எதற்க்கு மோடியின் ஊழல், கறுப்புப்பண ஒழிப்பு எல்லாம் வெறும் நாடகம் என்று சொல்கிறீர்கள்?
சிம்பிள் லாஜிக்.. சின்ன குழந்தைக்கு கூட புரியும்...
4120 MLA, 790 MP.. இதுல 39% அரசியல்வாதிகள் மேல் கிரிமினல் கேஸ் இருக்கு. இப்ப இருக்கிற அரசியல்வாதிகளில் 67% கிரிமினல்ஸ் பிஜேபியில் தான் இருக்காங்கனு ரிப்போர்ட் சொல்லுது.. 4 வருஷம் ஆகப்போகுது எத்தனை கிரிமினல் அரசியல்வாதிகள் மேல் ஆக்க்ஷன் எடுத்து உள்ளே போயி இருக்காங்க சொல்லுங்க!! மோடியை எதிர்க்கும் ஒரு சில "கிரிமினல்ஸ்" வேணும்னா உள்ள போயி இருப்பாங்க..
டாப் 50 கார்ப்பரேட் வாராகடன் மட்டும் 6.7 லட்சம் கோடி (மொத்த வாரகடன் 8.9 லட்சம் கோடி). 2014ல் இருந்து வருமானவரி ஒழுங்கா கட்டாமல் டாப் 100 கார்ப்பரேட் ஏமாற்றிய பணம் மட்டும் 1.83 லட்சம் கோடி. இவங்களில் எவ்வளவு பேரு இப்ப சிறையில் இருக்காங்க?? சொல்லுங்க..
MLA, MP, பினாமி, தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், டைரக்டர், தயாரிப்பாளர்கள், விளையாட்டு துறையில் முக்கியான புள்ளிகள், அரசாங்க துறையில் மேல்மட்ட மக்கள்.. அனைத்து முக்கியமான தனியார் துறையின் மேல்மட்ட மக்கள்.. இவங்க தான் ஊழல், கருப்பு பணம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை... இவர்களில் எவ்வளவு பேரு மோடிஜி "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்" ஆக்சன்ல இப்ப ஜெயிலில் இருக்கிறார்கள்?? இவங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுத்துட்டு.. இவங்க மேலே எந்த ஒரு ஆக்சன் எடுக்காம.. நீங்க எந்த ___ புடுங்க முடியாது...
இப்பவாது புரியுதா? இந்த ஊழல், கருப்பு பணம் ஒழிப்பு, புரட்சி, புண்ணாக்கு எல்லாம் வெறும் வெளம்பரம், அரசியல் நாடகம்..
ரொம்ப வருத்தமான விஷயம் என்னன்னா.. கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் ஊழல் ஒழிப்புக்கு எடுத்த முயற்சி கூட இவ்வளவு மெஜாரிட்டி வைத்து இருக்கும் மோடி ஆட்சியில் எடுக்காதது தான்.. இப்படி ஒரு தனி மெஜாரிட்டியை மக்கள் நலனுக்கு பயன்படுத்தாம.. கார்ப்பரேட், RSS நலனுக்கு மட்டும் பயன்படுத்தியது தான் இவர்களின் சாதனை.. அதுவே நமக்கு வேதனை..😢
- சுவாதி, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக