வியாழன், 15 பிப்ரவரி, 2018

அமெரிக்கா பள்ளி கூடம் துப்பாக்கி சூடு; 17 பேர் உயிரழப்பு !

49394AE000000578-5392559-image-m-8_1518656671204 அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி!! - (வீடியோ) அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி!! - (வீடியோ) 49394AE000000578 5392559 image m 8 1518656671204அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி!! – (வீடியோ)மாலைமலர்: அமெரிக்காவின் புளோரிடாவில் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளி கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 17 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நிகோலஸ் கிரஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். எப்.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணைக்கு உதவியாக உள்ளனர். நிகோலஸ் ஒழுங்கீன காரணங்களுக்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இதுபற்றி புரோவார்டு நகர ஷெரீப் ஸ்காட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, நிகோலஸ் கொலைகாரன். அவன் போலீசாரின் காவலில் உள்ளான். அவனது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அவனிடம் நிறைய துப்பாக்கி குண்டுகள் உள்ளன. அதனால் ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி ஒன்று அவனிடம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இச்சம்பவத்தில் 12 பேர் கட்டிடத்தின் உள்ளேயும், 2 பேர் கட்டிடத்தின் வெளியேயும், ஒருவர் பள்ளி கூடத்தின் வெளியே தெருவிலும் கொல்லப்பட்டு கிடந்தனர். 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக