செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

ஸ்ரீதேவியின் கணவருக்கு எதிராக திரும்பிய அந்த 15 நிமிடம்.. போனி கபூர் மீது சந்தேகம்!

மரணம் Siva o Oneindia Tamil : துபாய்: ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளது துபாய் போலீஸ். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மரணம் அடைந்தார். முதலில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. பின்னர் தான் அவர் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
 ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரின் செல்போனை பறிமுதல் செய்து அவர் யார், யாருடன் பேசினார் என்பதை பார்த்துள்ளனர். மும்பை மும்பை திருமணம் முடிந்த கையோடு மும்பை வந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சனிக்கிழமை துபாய்க்கு சென்றுள்ளார். மாலை 5.30 மணிக்கு ஹோட்டலை அடைந்த அவர் 15 நிமிடங்கள் ஸ்ரீதேவியுடன் பேசியுள்ளார்.

 மாலை 5.45 மணிக்கு டின்னருக்கு வெளியே செல்ல தயாராக பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி இறந்துவிட்டார். இந்நிலையில் போனி கபூர் மீண்டும் துபாய் சென்றது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
 மும்பைக்கு சென்ற நீங்கள் எதற்காக திரும்பி வந்தீர்கள் என்று துபாய் போலீசார் போனி கபூரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவரிடம் வாக்குமூலமும் வாங்கியுள்ளனர். மாலை 5.45 மணிக்கு பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி 15 நிமிடங்களாகியும் வெளியே வராததால் போனி கபூர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். ஸ்ரீதேவி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை பார்த்துவிட்டு தனது நண்பருக்கு போன் செய்துள்ளார். பின்னர் இரவு 9 மணிக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக