செவ்வாய், 16 ஜனவரி, 2018

வி ஹெச் பி தலைவர் தொகாடியா மருத்துவ மனையில் ! போலீஸ் கைதுக்கு பயந்து நாடகம் ?


மாலைமலர் :விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா மாயமானதாக கூறப்பட்ட நிலையில், சுயநினைவின்றி அவர் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணமல் போன வி.எச்.பி தலைவர் பிரவீன் தொகாடியா சுயநினைவின்றி மீட்பு அகமதமாபாத்: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா மீது ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் போலீசில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக ராஜஸ்தான் மாநில போலீசார், குஜராத் வந்தனர். குஜராத் மாநில சோலா போலீஸ் நிலையம் வந்த அவர்கள், அம்மாநில போலீசாருடன் தொகாடியாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு பிரவீன் தொகாடியாவை காணாததால் போலீசார் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் சோலா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பிரவீன் தொகாடியாவை காலை 10 மணி முதல் காணவில்லை என்றும், அவரது பாதுகாப்பு மற்றும் அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் கோஷமிட்டனர். தொகாடியாவை கைது செய்தனரா? என்பதை போலீசார் உறுதியாக தெரியவிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதைப்போல தொகாடியாவை ராஜஸ்தான் போலீசார் பிடித்து சென்றதாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஜெய்ஷாவும் குற்றம் சாட்டினார். ஆனால், பிரவீன் தொகாடியாவை போலீசார் கைது செய்யவில்லை என அகமதாபாத் போலீஸ் கூறியது. இந்நிலையில், அகமதாபாத் அருகில் உள்ள சாஹிபாக் என்ற பகுதில் அவர் சுயநினைவின்றி கிடந்ததாகவும், பின்னர் அவர் மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
 62 வயதான தொகாடியா குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக