ஞாயிறு, 7 ஜனவரி, 2018

கலைஞரின் இலக்கிய வாரிசு கனிமொழி பிறந்தநாள் ! January 5, 1968

Ravi Raj : அண்ணா மறைந்து திமுக தத்தளித்த காலத்தில் அக்குழந்தை பிறந்தது , அப்பொழுது முதல்வரானார் கலைஞர். அக்குழந்தை பிறந்த ராசியில் கலைஞர் முதல்வரானார் என பகுத்தறிவாளர்களே சொல்லிகொண்டிருந்தனர்
அக்குழந்தைதான் கனிமொழி
எப்படி எல்லாம் கலைஞருக்கு சிக்கல் உருவாக்கலாம் என எதிர்பார்த்திருந்த கூட்டம் அக்குழந்தையினையும் வைத்து கட்டம் கட்ட பார்த்தது
ராசாத்தி என் மகள் கனிமொழியின் தாய் என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு நகர்ந்தார் கலைஞர்
கலைஞர் தன் அருகே வைத்து வளர்ந்த குழந்தை என்பதால் இலக்கியம் அவருக்கும் வந்தது, கனிமொழி ஒரு இலக்கியவாதி என்பதில் மாற்றுகருத்து இல்லை
கனிமொழி அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைபட்டவர் அல்ல, மாறாக யாரை அனுப்பினாலும் சூனியம் வைத்து தனக்கு எதிராக திருப்பிவிடும் டெல்லியில் முரசொலிமாறன் கலைஞரின் மனசாட்சியாக இருந்தார்
அந்த இடம் காலியானபின் தன் மனசாட்சிபடி மாறன் மகனை கலைஞர் அனுப்ப அதே சூனியம் வேலை செய்தது அதன்பின்பே தன் பிரதிநிதியாக கனிமொழியினை டெல்லிக்கு அனுப்பினார் கலைஞர்

கனிமொழி மீது குறிப்பிட்டு சொல்ல கூடிய விஷயம் என்னவென்றால், 2009 ஈழப்போரில் அப்பாவி மக்களை காப்பாற்ற தன்னால் முடிந்த செயல்களை செய்தார்
அமைதி ஒப்பந்தம் தயாரித்தது , சிதம்பரதோடு சேர்ந்து அந்த மக்களுக்கு ஆபத்து வராத வகையில் போரை நிறுத்த உழைத்தது என கனிமொழியின் பங்கு மறுக்க முடியாதது
ஆனால் பிரபாகரன் அந்த ஒப்பந்தத்தை தூக்கி எறிந்ததும் பின் என்னவெல்லாமோ நடந்ததும் வரலாறு
கனிமொழிக்கும் சிதம்பரத்திற்கு மட்டும்தான் அம்மக்களை காக்கும்பொறுப்பு உண்டா? பிரபாகரனுக்கு இல்லையா
அதன் பின்னும் ராஜக்சேவினை சந்தித்து தமிழருக்கு எதிராக இனி ஒரு ஓலைவெடியும் வெடிக்க கூடாது, மீட்புபணிகளை நிறைவாக செய்ய வேண்டும் , வடக்கே 50 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டும் என உறுதியளிக்க சென்ற குழுவில் அவரும் இருந்தார்
அது எப்படி ராஜபக்சேவினை அவர் சந்திக்கலாம் என்பவர்கள், ஆண்டன் பாலசிங்கம் கிட்டு எல்லாம் பிரேமதசாவினை சந்தித்ததை மறைப்பார்கள், 2004 வரை பாலசிங்கம் சிங்களனோடு சமாதானம் பேசியதை எல்லாம் மறைப்பார்கள்
கனிமொழி கொண்ட குழு சந்தித்து திரும்பிய பின் இன்றுவரை இலங்கையில் தமிழருக்கு எதிராக பொட்டுவெடி கூட வெடிக்கவில்லை என்பது இன்னொரு விஷயம்
இம்மாதிரி விஷயங்களில் கனிமொழியினை கவனித்து பார்க்க வேண்டும், அவரின் அரசியல் பக்கங்களில் இதுவும் ஒன்று
இறுதிபோர் நடந்தபொழுது,, பிரபாகரனை பற்றி கலைஞரிடம் கேட்டபொழுது அவர் சொன்னார், மறக்க முடியா , ஆயிரம் அர்த்தமுள்ள விஷயம் அது
"ஒருவேளை பிரபாகரன் பிடிபட்டால் அலெக்ஸாண்டர் போரஸ் மன்னனை நடத்தியது போல் நடத்தவேண்டும் என ஆசைபடுகின்றேன்" என அவர் சொன்னபொழுது அருகில் நின்ற கனிமொழியின் முகம் மறக்க முடியாது
ஈழப்போரில் ஓரளவேனும் செய்தாக வேண்டும், அம்மக்கள் காப்பாற்றபடவேண்டும் என கனிமொழி இறங்கியபின்புதான் அவர் மீது ஸ்பெக்ட்ரம் சர்ச்சை வெடித்தது
சிறையில் எல்லாம் வைத்தார்கள், கனிமொழியும் சமத்தாக அமர்ந்திருந்தார்
இப்பொழுது அவர் விடுவிக்கபட்டும் ஆயிற்று, அவர் மேல் குற்றம் இல்லை என நீதிமன்றமும் சொல்லிற்று
இனி கனிமொழியின் அரசியல் பயணம் வேகமாக இருக்கலாம், முரசொலி மாறனுக்குபின் டெல்லியின் திமுக முகமாக அவர் அறியபடலாம்
அவர் கவிஞர் என்பதை அவரே ஏற்கமாட்டார், ஆனால் கலைஞர் குடும்பத்து இலக்கிய வாரிசு அவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது
இன்று அவரின் பிறந்தநாள், தடைகளை தாண்டி அரசியலிலும், இலக்கியத்திலும் அவர் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்
இந்த வீணாய் போன மனுஷ்யபுத்திரன், போலிச்சாமி ஜெகத்கஸ்பர் போன்றோரை தன் அருகே வர விடாமல் விரட்டிவிட்டாலே கனிமொழிக்கு பாதிவெற்றி கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக