ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது

தினமலர் : "சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது" > ரியாத்: அரண்மணை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சவூதி இளவரசர்கள் 11 பேர் மன்னர் அரண்மணையை முற்றுகையிட்டனர். எண்ணெய் வளம் மிக்க நாடான சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை சரிவு,, 195 பில்லியன் ரியால் (சுமார் ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 500 கோடி) பற்றாகுறை பட்ஜெட் ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய மானியங்கள் ரத்து செய்யப்பட்டன. மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. மேலும் மன்னர் குடும்பத்து உறவினர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது... இதன் மூலம் மன்னர் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் நிறுத்தப்பட்டன.


இதனை கண்டித்து ரியாத் நகரில் உள்ள காசிர் அல் ஹாகிம் மன்னர் அரண்மனையின் முன்பாக 11 இளவரசர்கள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அவர்களை அப்புறபடுத்துமாறு மன்னர் சல்மான் உத்தரவிட்டார். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததனர். பின்னர் அவர்களை கைதுசெய்ய தேசிய பாதுகாப்புபடையினருக்கு உத்தரவிடப்பட்டதால் 11 இளவரசர்களும் கைது செய்யப்பட்டு ஹாயிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக