புதன், 17 ஜனவரி, 2018

ஜிக்னேஷ் மேவானி ரிப்பப்ளிக் டிவி யை புறக்கணித்தது ....

ஜிக்னேஷ் மேவானியின் சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரிபப்ளிக் டிவிக்குலாம் பேட்டி தரமுடியாது என்று அவங்க மைக்க எடுக்க சொல்லிருக்காரு. அப்பனா நாங்களும் பேட்டி எடுக்க மாட்டோம்னு பத்திரிக்கையாளர்கள் கூட்டாக நிற்க, சந்திப்பை புறக்கணிச்சுட்டு போயிருக்காரு ஜிக்னேஷ். (சிலர் பத்திரிக்கையாளர்கள் புறக்கணிச்சதா சொல்றாங்க).
1. ரிபப்ளிக் மாதிரியான பச்சையான பெய்ட் மீடியாக்கள்ட்ட பேசி, அத அவன் திரிச்சு வெளியிட்டு, அப்பறம் அவன கண்டிச்சுட்டு இருக்கறதுலாம் தண்டம். அவனலாம் ஒரு ஆளாவே மதிக்காம த ச்சீ பே னு தள்ளிவிட்டு போயிரனும். அததான் ஜிக்னேஷ் பண்ணிருக்காரு. சென்னைல நடந்த தலித்துகளுக்கு எதிரான கொடுமைய பத்தி ஜிக்னேஷ் பேசுனா கூட சென்னைல போய் சாதிவெறிய வளர்க்குறார் ஜிக்னேஷ்னு தான் அர்னாப் கத்தப்போறான். ரிபப்ளிக் டிவிக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்னு வெளிப்படையா அறிவிச்சு அத தன் கொள்கையாவே கடைபிடிக்கற ஜிக்னேஷ் அதுல உறுதியா நின்னதுல என்ன தப்பு?

2. ‘யார் வரனும் எந்த சேனல் மைக்க வைக்கனும்னு குறிப்பிட்ட சிலர் முடிவு செய்யக்கூடாது. அதுக்கு இந்தமாதிரி நாம் ஒத்துமையா நிக்கனும்’னு இந்த மேட்டர பத்தி ட்விட்டர்ல நிறைய பத்திரிக்கைக்காரங்க பொங்கிட்டு இருக்காங்க. யார் மலம் அள்ளனும், யார் பொணத்த பொதைக்கனும், யார் மணி அடிக்கனும்னு ஒரு க்ரூப்பு முடிவு பண்ணி வச்சுருக்கே... அத எதிர்த்தும் இதேமாதிரி ஒத்துமையா நின்னு கேள்வி கேப்பீங்களா சார் ??
3. ஆட்சிக்கு வந்து நாலு வருசம் ஆகப்போவுது. இன்னும் உங்கள மயிரா கூட மதிக்காம, ஒரு ப்ரஸ் மீட் கூட வக்காம ஊரு ஒலகம் சுத்திட்டு இருக்காரே... மோடி ஜி.. அவருக்கு எதிராவும் இதே மாதிரி சாலிடாரிட்டி காட்டுவீங்களா சார் ? போனமுறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தப்ப வாரம் ஒருமுறை ப்ரெஸ் மீட் இருக்கும்னு சொல்லிட்டு, அப்பறம் அத அப்டியே டீல்ல வுட்டாங்களே... அப்ப அவங்கள எதித்தும் இதே சாலிடாரிட்டிய காட்னீங்களா சார்?
- Jeyachandra Hasmi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக