புதன், 17 ஜனவரி, 2018

டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்: திவாகரன் தகவல்

divakaranதினமணி :மன்னார்குடி: கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலையே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று திவாகரன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் டிசம்பர் 5ம் தேதி மரணிக்கவில்லை என்றும், டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டதாகவும் திவாகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.< மன்னார்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பால் இறந்துவிட்டார். அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.< டிசம்பர் 4ம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டு ஜெயலலிதா இறந்துவிட்டார். ஆனால், அவர் இறந்ததை ஏன் அறிவிக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும் திவாகரன் தெரிவித்தார்.< ஏற்கனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் எழுந்த நிலையில், இன்று அவர் இறந்தது டிசம்பர் 4ம் தேதி என்று திவாகரன் அறிவித்திருப்பது மேலும் சர்ச்சையை வலுப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக