ஞாயிறு, 28 ஜனவரி, 2018

உலகின் மிக மோசமான ரெயில்களில் ......

ரயில்வே பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு!minnambalam : பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மனிதவளம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (ஜனவரி 27) பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “மனிதவள மேம்பாட்டிற்கு ரயில்வேத் துறை சிறப்பு கவனம் செலுத்தும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ரயில்வேத் துறை கூடுதல் கவனம் செலுத்தும். பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ரயில் ஓட்டுநர்களுக்கு மன அழுத்தம் இல்லாமல் இருக்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
ரயில் இயங்கும் அறை முற்றிலும் ஏ.சி. மயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கழிவறை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களுடன் நேரடி உரையாடல் வாய்ப்பையும்
ஏற்படுத்தியுள்ளோம்.இதுபோன்ற செயல்கள் பணியாளர்களுக்கு அழுத்தம் இல்லாத பணிச் சூழலை உருவாக்கித் தருகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் கடுமையானப் போட்டி காரணமாக கட்டணக் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ரயில்வேப் போக்குவரத்துத் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.” என்றார்.
ஹபிப்காஞ் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்ற அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன் கட்டுமானப் பணிகள் டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்து பயன்பாட்டுக்கு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக