ஞாயிறு, 28 ஜனவரி, 2018

பொன்மணி .. ஈழத்தில் சாதி ஆணவக்கொலை பற்றிய திரைப்பட இயக்குனர் தர்மசேனா பத்திராஜா மறைவு


பொன்மணி 1977 ஆம் ஆண்டில் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம்.
தர்மசேன பத்திராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் பாலச்சந்திரன், சுபாஷிணி, கலாநிதி செ. சிவஞானசுந்தரம் (நந்தி), எம். எஸ். பத்மநாதன், சித்திரலேகா மௌனகுரு முதலானோர் நடித்தார்கள்.
எம். கே. றொக்சாமியின் இசையில் கமலினி செல்வராஜன், சில்லையூர் செல்வராஜன் இயற்றிய பாடல்களை சக்திதேவி குருநாதபிள்ளை, எஸ். கே. பரராஜசிங்கம், கலாவதி சின்னசாமி, சாந்தி கணபதிப்பிள்ளை, ரஜனி-ராகினி சகோதரிகள், ஜனதா சின்னப்பு ஆகியோர் பாடினார்கள். டொனால்ட் கருணாரத்தின இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். திரைக்கதை வசனத்தை காவலூர் ராசதுரை எழுத இத்திரைப்படத்தை முத்தையா ராஜசிங்கம் என்ற தொழிலதிபர் தயாரித்தார்.



பாடல்கள்

  • எடுக்கும் இளம் தோளில் மணமாலையே, (பாடியவர்: சக்திதேவி குருநாதபிள்ளை, இசை: எம். கே. றொக்சாமி, பாடல் வரிகள்: கமலினி செல்வராஜன்)
  • பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள் (பாடியவர்: கலாவதி சின்னசாமி, இசை: எம். கே. றொக்சாமி, பாடல் வரிகள்: சில்லையூர் செல்வராஜன்)
  • வானில் கலகலவென இருபறவைகள் திரியுது, (பாடியோர்: எஸ். கே. பரராஜசிங்கம், கலாவதி சின்னசாமி, இசை: எம். கே. றொக்சாமி)

சிறப்புத் தகவல்கள்

  • பேராசிரியர் கைலாசபதியின் மனைவி திருமதி சர்வமங்களம் கைலாசபதியும் இப்படத்தில் நடித்துள்ளார்.
  • படப்பிடிப்பு யாழ்ப்பாணம், குருநகர், சுன்னாகம், பண்ணை, மண்ணித்தலை, பரந்தன், ஆனையிறவு, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற்றன.
  • இதில் கதாநாயகனாக நடித்த பாலச்சந்திரன், கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரன் அல்ல.  விக்கிபீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக