வியாழன், 18 ஜனவரி, 2018

சென்னை தனியார் பள்ளி மாணவர் மரணம்.. கொலை செய்த ஆசிரியர்

Essaki - Oneindia Tamil சென்னை: சென்னை பெரம்பூரில் தனியார் பள்ளி மாணவர் ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார். இதில் ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. பெரம்பூர் அருகே இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவர் நரேந்தர் மரணமடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை நடந்து இருக்கிறது.  இதனால் அங்கு பெரிய அளவில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. மாணவர் உயிரிழப்பை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவித்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய கோரி நேற்று போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் பெரிதான நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தற்போது இந்த மரணம் குறித்து விசாரித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக